கொல்லப்பட்டவர்களுக்காக இன்றும் நாளையும் அஞ்சலி செலுத்தப்படுமென கியூபா மேலும் குறிப்பிட்டதுடன், உயிரிழந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப் படைகள் மற்றும் புலனாய்வு முகவரகங்களின் உறுப்பினர்கள் எனக் கூறியுள்ளது.

ஜனாதிபதி மதுரோ அதிகாரத்துக்கு வந்தது முதல் அவருக்கு குறிப்பிட்ட பாதுகாப்பை கியூபா வழங்கி வருகின்றது.