மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) அவர்கள் பதவி வகித்த காலத்தில், அவரது பாராளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், விளையாட்டு உத்தியோகத்தர்கள், கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது, புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டரங்கு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.