யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…

 

தெற்கிலிருந்து இந்தக் கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல்.

(“யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் கனடாவில் எழுமா.???

நான் எனது சமுத்துவமற்ற, சகோதரத்துவமற்ற, சமுதாயத்திற்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகள் அல்ல, அவை எச்சரிக்கையுமல்ல, அவற்றால் எந்தப்பயனுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் நமது மக்கள் நம்மைப் பற்றி அறியவேண்டிய பல உண்மைகள் நிறைய உள்ளன என்பதை ஆணித்தரமாக அடித்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்..

(“எழுக தமிழ் கனடாவில் எழுமா.???” தொடர்ந்து வாசிக்க…)

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

(“நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் அனந்தி சசீதரனிடம் விசாரணை செய்ய உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)