மேய்ச்சல் தரை இல்லாததால் மடியும் ஆபத்தில் கால்நடைகள்

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் மாடுகள் வளர்ப்போர் அவதி. கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் சுமார் 500 மாடுகள் வரை வளர்த்து வரும் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் தனது மாடுகளை இனிமேல் வளர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக எங்கு கொண்டு செல்வது என்று தெரியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை?

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (06) தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார்.

136 வெளிநாட்டவர்கள் கைது; பொலிஸார் அதிரடி

செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிவியா

பொலிவியாவின் இதயமாக இருக்கும் ஈவோ மொரேல்ஸின் அரசியல் கோட்டையான விவசாயப்பகுதிகளுக்குள் செல்லுகிற பாதை இப்போதுகூட கடக்கமுடியாததாகத்தானிருக்கிறது.டயர்கள், முள்வேலிகள், மரத்தடுப்பு அரண்கள் என்று கண்ணுக்கெட்டியதூரம்வரை பாதைகள் மறிக்கப்பட்டிருக்கின்றன.

பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மொரேல்ஸின் ஆதரவாளர்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழியில் கிட்டத்தட்ட 100 தடுப்புகளில் ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் – தடிகள் மற்றும் ஆணிப் பலகைகள் ஆகியவற்றுடன் எதிர்ப்பட்டு – உள்நுழையும் அனுமதிச்சீட்டு அல்லது மருத்துவக் காரணங்கள் இல்லாவிட்டால் திருப்பியனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் 100 மைல் தூரம் பயணித்த பின்னர், ஆண்டியன் அடிவாரத்தில் ஒரு பசுமையான நதிப் பள்ளத்தாக்கில் வெப்ப நகரமான வில்லா துனாரியை அடைந்தேன். நாட்டின் முதல் சுதேசி ஜனாதிபதியான மொரேல்ஸ் தனது அரசியல் வாழ்க்கையை இங்கேதான் தொடங்கி முடித்தார்.

இங்கே இன்னமும் அந்த மனிதரைக் கோயில் கட்டிக் கும்பிடாத குறைதான்.

வில்லா துனாரியை பொலிவியாவின் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத் தலைமையகம் என்றே சொல்லலாம்போல.

பொலிவியாவின் பிரதான நெடுஞ்சாலையைத் தடுத்து, அதன் தேசிய பொருளாதாரத்தை முடக்கி, ஆயிரக்கணக்கான கோகோ விவசாயிகள் – குழந்தைகள் உட்பட – நகரத்தின் முக்கிய நதிப்பாலத்தை சுற்றி முகாமிட்டுள்ளனர். பொருட்களின் போக்குவரத்து இல்லாததால், முக்கிய நகரங்களெங்கும் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை.

முற்றுகைப்போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக 30 மைல் தாண்டி வந்திருக்கும் கோகோ விவசாயி அன்டோனியெட்டா லெடெஸி “மொரேல்ஸ் எங்களுக்குத் தந்தையைப் போன்றவர்” என்கிறார் : “அவர் திரும்பி வராவிட்டால், பொலிவியாவில் அமைதி திரும்பாது!”

புதிய அரசாங்கம் தேர்லுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அதில் மொரேல்ஸ் போட்டியிடத் தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் வில்லா துனாரியில் உள்ள விவசாயிகள், நாடு கடத்தப்பட்ட தங்கள் தானைத் தலைவனைத் திரும்ப அழைப்பதற்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறார்கள்.

50,000க்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள், தங்களுக்கு அரசியல் குரல் கொடுத்த,உள்கட்டமைப்பில் பெரும் மாறுதல்கள் விளைவித்த, கல்வியாலும் சுகாதாரத்தாலும் தங்களை மேம்படுத்திய – தாங்கள் ஒவ்வொருவரும் ‘ஈவோ ‘ என்று வாயார அழைக்கும் தலைவனுக்காக திரண்டு நிற்கிறார்கள்.

தங்கள் சக விவசாயத்தோழன் என்று ஒவ்வொருவரும் அந்தரங்கமான அணுக்கத்துடன் மோரெல்ஸை நேசிப்பதை உணரமுடிகிறது. ஈவோவைப்பற்றிப் பேசினாலே தடுப்பு அரண்களைத் தாண்டுகிறது கண்ணீர்.

“நாங்கள் பார்த்த ஒரே ஜனாதிபதி அவர்தான்” என்று கோகோ விவசாயி கிரிகோரியோ சோக் கூறுகிறார். “அவர் எங்களுடன் வயல்களில் உழைத்தவர்!”

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி – நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக மொரேல்ஸ் அறிவித்த நாள் – வில்லா துனாரியில் பொலிவியாவின் விவசாயிகள் ஒன்றுகூடத் தொடங்கினர். இது ஒரு போர் முகாமாக மாறத்தொடங்கியது. எங்கெங்கும் எழும்பிய தற்காலிக கூடாரங்களால் நெடுஞ்சாலை முற்றுகையிடப்பட்டு முடங்கியது.

போர்க்குரல் எழுப்புவதும், தங்களுக்குள் சமைத்து உண்ணுவதும், ஓய்வெடுப்பதும், மீண்டும் போராடுவதுமாக…திரள்திரளாக நாடெங்கிலுமிருந்து குழுமிய விவசாயிகள். இரவு உணவுக்குப்பின்னர் அரசியல் விவாதங்கள். போராட்டத்தளபதிகளின் திட்டமிடல்கள்.

‘பொம்மை ஜனாதிபதி ஜீனைன் ஏனெஸ் பதவி விலகவேண்டும்!’, ‘பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 30 மொரேல்ஸ் ஆதரவாளர்களின் மரணத்துக்கு நீதி வேண்டும்!’ இதுவே வானுயரும் போர்முழக்கம். படபடக்கிற பதாகைகளின் முழக்கம்.

“இந்த புதிய சட்டவிரோத அரசாங்கத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் ” என்று உள்ளூர் தொழிலாளர் இயக்கத்தில் மொரேல்ஸின் துணைத் தலைவராக செயல்பட்ட ஆண்ட்ரோனிகோ ரோட்ரிக்ஸ் கூறுகிறார், அவர் முன்னாள் ஜனாதிபதியின் வாரிசாக இங்கு பலரால் பார்க்கப்படுகிறார். “ஈவோ தனது பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவேண்டும். 24 மணி நேரத்திற்குள், 100,000 விவசாயிகளை அணிதிரட்ட எங்களால் முடியும் ” என்கிறவர், “தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை, முற்றுகைப்போராட்டத்தை மாதக்கணக்கில் நடத்தக்கூட எங்கள் விவசாயிகள் தயாராக உள்ளனர் . போராட்ட உறுதியும், போதிய உணவு சேமிப்பும், சரியான களமும் எங்கள் பலம்!” என்று நம்பிக்கையுடன் பெருவிரலுயர்த்துகிறார்.

இதுவரையிலான மூன்றாவது வார முற்றுகைப் போராட்டம் நகர வாழ்க்கையை நிலைகுலைத்துள்ளது. உணவுத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் முற்றுகையாளர்களின் உணர்வு மழுங்குவதாயில்லை.

“எங்கள் வயல்களில் பயிர்கள் வாடிக்கருகிக்கொண்டிருப்பதை நினைத்தபடிதான் நாங்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால்,இது ஒரு அவசியமான தியாகம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். ஈவோவின் ஆட்சியில் எங்களுக்கு வழங்கப்பட்ட இதே உரிமைகளை இந்தப்போராட்டம் எங்கள் பிள்ளைகளுக்கும் வழங்கும்!” என்றார் செராபினோ ஆலிவேரோஸ் என்கிற ஒரு கோகோ விவசாயி.

independent.co.uk
11 December 2019

திசைவழிகளை திசைகாட்டல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும், கடந்த காலத்தின் தொடர்ச்சியும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பும் இந்த நிகழ்காலத்தில் நிரம்பி இருக்கிறது.

குடியுரிமை!

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.

அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

முன்மாதிரி,கிராம பஞ்சாயத்து

உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராமம்!

ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசுகள் உட்பட மொத்தம் 43 நாடுகளின் பிரதிநிதிகளை தன்னை நோக்கி ஈர்த்திருக்கிறது தமிழகத்தின் ஓடந்துறை கிராமம்.

யாழ். விமான நிலையம் குறித்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னைக்கான விமானப் போக்குவரத்துக்காக, பயணிகளிடம் இருந்து, விமான நிலைய வரியாகப் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு, அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் கலாநிதி காசிநாதன், பதினைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பனில் வாழ்கிறார். இருந்தாலும் பொது வெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர், கலாநிதி இந்திரபாலா. இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த (2019) தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். நமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம் தெரியும்’ என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.