லியங்கஹவல வீதி தாழ்யிறக்கம்

பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம்,லியங்கஹவல பத்தேரவ பகுதியில் வீதியின் ஒரு பகுதி வியாழக்கிழமை (04) அன்று தாழ் இறங்கியுள்ளது. குறித்த இடம் இராவண நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சிநிறுவனத்தின் அறிக்கை பெறப்பட உள்ளது.

மக்களே… விழிப்புடன் இருங்கள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலை குறித்து புதன்கிழமை (03) அன்று இடம்பெற்ற சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, காலாவதியான மற்றும் பழுதடைந்து காணப்பட்ட பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாவிலாறு அணைக்கட்டை புனரமைக்க தாமதமாகும்

“சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டு முழுமையாக புனரமைக்க,வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்” என்று திருகோணமலை பிராந்திய நீர்ப்பாசன துறை பணிப்பாளர்,பிரதம எந்திரி க.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Highway கட்டணம் இன்று முதல் அறவிடப்படும்

நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிட வேண்டாம் என குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை  (RDA) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நிதி வழங்கிய ஐக்கிய இராச்சியம்

திட்வா புயலால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி வழங்க ஐக்கிய இராச்சியம்  890,000 டாலர் நிதியை ஆதரவுடன் வெளிநாட்டு வேலை பார்க்கும் மஹா நிர்வாக தெரேசா ஓ’மஹோனி பெண்கள் அதிகாரி வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜித ஹேரத் அவர்களிடம் வழங்கினார்.

ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

“மோடி அழுத்தத்திற்கு அடிபணியக் கூடியவர் அல்ல”

பிரதமர் மோடி அழுத்தத்திற்கு அடிபணியக்கூடியவர் அல்ல என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இன்றைய  பயணம் குறித்து ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அளித்த பிரத்யேக செவ்வியில் கூறப்பட்டுள்ளதாவது, 

வெலிமடையில் மண்சரிவு அபாயம்

வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் புதன்கிழமை (3) தெரிவித்துள்ளது.

பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களை பனி மூழ்கடித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது பனிப்புயல் உருவாக்கி உள்ளது. இது ‘பாம் சைக்ளோன்’ எனப்படும் அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீள ஆரம்பமாகவுள்ள காணாமல்போன எம்.எச்370 விமானத்துக்கான தேடல்

மலேசியா எயார்லைன்ஸ் விமானமான எம்.எச்370-இன் சிதிலங்களுக்கான தேடலானது 239 பேருடன் விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதம் 30ஆம் திகதி மீள ஆரம்பமாகவுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.