முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளையும், ஒரு சிறுவனையும் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் குழு திங்கட்கிழமை (01) அன்று பாதுகாப்பாக மீட்டனர்.
Month: December 2025
களனி கங்கையின் நீர்மட்டம் 8.45 அடியாக உயர்வு
இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டித்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
