உ க்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யா இணக்கம்

உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இணங்கியுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மியான்மர் தேர்தல்: இராணுவ ஆதரவு கட்சி வெற்றி

மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்தலில், இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி  பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்

தேங்காய் எண்ணெய்க்கு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் புதிய வரி விதிக்கப்படுவதால், சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கும். அதனால், தீங்கு விளைவிக்கும் பண்ணை எண்ணெய் மற்றும் பிற வகை எண்ணெய்கள் சந்தையில் பொதுவானதாக மாறக்கூடும் என்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய பிரச்சாரம் எச்சரிக்கிறது.

PTA, PSTA எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி நீதி அமைச்சிற்கு முன்பாக   பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்  வௌ்ளிக்கிழமை (30) அன்று முன்னெடுக்கப்பட்டது. 

1,750 ரூபா சம்பளம் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான   ஒப்பந்தம்  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து வெள்ளிக்கிழமை (30) காலை கைச்சாத்தானது .

உண்ணாவிரதிகளை பேச்சுக்கு அழைத்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்த கலந்துரையாடலை அடுத்த செவ்வாய்க்கிழமை (3) மாலை 6 மணிக்கு நடத்த ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் “அரகலய” நாடு முழுவதும் பற்றியெரியும் போராட்டங்கள்: டிரம்பிற்கு எதிராக மக்கள் வீதியில்!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக குடிவரவு கொள்கைகள் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்க மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள் – அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) மேற்கொண்டு வரும் தீவிரமான நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் பெரும் திரளாகப் போராடி வருகின்றனர்.

’ஈரான் மீதான தாக்குதலுக்கு துணைபோக மாட்டோம்’ – சவூதி அரேபியா

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.

16,000 ஊழியர்களை பணிநீக்கம் ’அமேசன்’

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசன், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.

39வது ஆண்டு நினைவேந்தல்…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் புதன்கிழமை (28) அன்று மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள படுகொலை நினைவு தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.