அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அந்த நாடு இதுவரை 1,054 அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்தியதில் பூமிக்கடியில் 2,300 அடி ஆழத்தில் சோதனை நடத்தப்பட்டது.