எந்த அனர்த்தத்தினாலும் அழித்துவிட முடியாத மனிதாபிமானத்தை இந்த அனர்த்தத்தின் போது காண முடிகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உறவினர் அல்லாத, இதுவரை முகங்களைக் காணாத நபர்களுடைய வீட்டையும் கிணறுகளையும் சுத்தம் செய்வதற்காக ஹம்பாந்தோட்டையிலி ருந்து கண்டிக்கும் மாத்தறையில் இருந்து கண்டிக்கும் காலியிலிருந்து நுவரெலியா யாவுக்கும் சென்று தனது உறவுகளாகப் பார்த்து மனமுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகளை எந்த பேரனர்த்தத்தாலும் அழிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.