மூதூரில் குடிநீர் குழாயை இணைக்கும் பணி முன்னெடுப்பு

எஸ்.கீதபொன்கலன் மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி இன்று(6)காலை முதல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.