மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.