குருக்கள்மடத்தில், கசிப்புடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்த ஒருவர் திங்கட்கிழமை ( 05 ) அதிகாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.