இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முழு அதிகாரமுடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது முதல் 2026 ஏப்ரல் 16 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.