இந்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பாரிய திட்டம் ஒன்று உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர், நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.