தனது நாடு “வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்” என்று , ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜாரீஃப், வலியுறுத்தியுள்ளார்.
Author: ஆசிரியர்
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்
அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

வடக்கின் கடல் வளம்: 100 மில்லியன் டொலர் இலக்கு
“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப்பொ பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம்; காணி அளவீடு தற்காலிகமாக நிறுத்தம்
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டங்கள்
உயர்தரப் பரீட்சை: ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை
ஹோ சி மின்
மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி
மேலும் 2 எரிவாயு (எல்.பி.ஜி) கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் மூடியது. கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 5 இல் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. இதை ஈரான் மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

