மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி

ஹார்முஸ் ஜலசந்​தியை திறந்து வட வேண்​டும் என அமெரிக்கா வலி​யுறுத்தி வரு​கிறது. ஆனால் இந்​தி​யா, ரஷ்​யா, சீனா, பாகிஸ்​தான், இராக் ஆகிய 5 நட்பு நாடு​களின் கப்​பல்​களுக்கு மட்​டுமே அனு​மதி வழங்​கப்​படும் என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி நேற்று முன்​தினம் அறி​வித்​தார்.

ஈரான் போர் தொடங்​கிய​தில் இருந்​து, இது​வரை 4 எரிபொருள் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா வந்​துள்​ளன. இந்​நிலை​யில் மேலும் 2 எல்.​பி.ஜி.  கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஈரான் அனு​ம​தித்​துள்​ளது. 

இந்த கப்​பல்​களில் 90,000 தொன்​களுக்கு அதி​க​மாக சமையல் எரிவாயு கொண்​டு​வரப்​படு​கிறது. இந்த 2 கப்​பல்​களும் வளை​கு​டாவை கடந்து இந்​தியா வந்து கொண்​டிருக்​கின்​றன. மேலும் 5 எரிபொருள் கப்ப்​ல​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க ஐக்​கிய அரபு அமீரகம் அருகே காத்​துக்​ கிடக்​கின்​றன.