’தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்’

தமிழ்மக்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய இனியாவது சிந்திக்க வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க அலுவலக பொறுப்புகளிலிருந்து சந்திரிகா விலகினார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார். நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டார்.

நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

’அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்’ – த.தே.கூ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இடைக்கட்டு பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு

வள்ளிபுனம் – இடைக்கட்டு கிராமத்தில், கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த 52 கிலோ 800 கிராம் வெடிப்பொருள்கள், நேற்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இடைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞர் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல்

சகல ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அத்துடன் வெற்றிடமாகவுள்ள ஆளுநர் பதவிகளுக்கு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் புதுய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தமிழகத் தலைவர்களின் விமர்சனம் தமிழர் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும்’

ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்‌ஷவின் தெரிவை, தமிழக அரசியல் தலைவர்களில் ஒருசிலர் தமது வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கிறார்களெனத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இது, தமது மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்காமல் மேலும் மேலும் துன்பத்துக்கு வழிவகுத்துவிடுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் ரணில்; மாலை விசேட உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகல் கடிதமானது, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் – ஞானசார

ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கடமை பொறுப்பேற்றார் புதிய ஜனாதிபதி

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் 10.30 மணிக்கு இருந்த சுபநேரத்தில், ஜனாதிபதிக்கான தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.