அமெரிக்காவுக்கு எதிரான போரில் ’’வரலாற்று வெற்றி’’: ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு எதிரான போரில் தாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்கியது ஏன்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் முழக்கம், இறுதியில் வெறும் சலசலப்பாக முடிந்து, அவர் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்குக் காரணம் ஈரானுடனான நேரடிப் போர் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள்ளேயே அவர் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான உள்நாட்டுப் போராட்டமுமே ஆகும்.

இரு வார கால போர் நிறுத்தம்: ஈரான் – அமெரிக்கா சம்மதம்

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டுட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.

மீண்டும் தயாரானது யாழ் தேவி

தித்வா’ (Ditwa) சூறாவளியினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை  (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல்

தற்போது நிலவும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ‘எல்-நினோ’ (El-Nino) நிலைமை மற்றும் யல பருவச் சிறுபோகச் சாகுபடி ஆரம்பமாகியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

9 கோடி ரூபாயுடன் ஹெரோயின் கடத்தல்காரி கைது

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும்.