ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ் நாட்டு கப்பல்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா

கியூபாவின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, ரஷ்யா தனது இரண்டாவது எண்ணெய் கப்பலை அந்நாட்டிற்கு அனுப்பவுள்ளதாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் நேற்று (2) அறிவித்துள்ளார்.

2,010 கைதிகளை விடுதலை செய்கிறது கியூபா

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் பொருளாதார அழுத்தத்தினால் அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு நடவடிக்கையாக, 2,010 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக கியூபா அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்குமா எரிபொருளின் விலை?

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இலவச எரிபொருள் விநியோகத்தால் போக்குவரத்து நெரிசல்

இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, அந்தப் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான  எரிபொருளே இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 

‘ஈரான் வெற்றியைப் பிரகடனப்படுத்தி போரை முடிக்க வேண்டும்’

தனது நாடு “வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்” என்று , ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜாரீஃப், வலியுறுத்தியுள்ளார்.

வடக்கின் கடல் வளம்: 100 மில்லியன் டொலர் இலக்கு

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப்பொ பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்; காணி அளவீடு தற்காலிகமாக நிறுத்தம்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டங்கள்

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக புதன்கிழமை (01) நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சை: ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (Hartley College) மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளனர். துறை வாரியான சாதனைகள்: •