பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு அதிகரிப்பு

சூறாவளி, டிட்வா போன்ற பெரிய பேரழிவுகளுக்குப் பிறகு மாரடைப்பு மற்றும் பிற இருதய அவசரநிலைகள் கிட்டத்தட்ட 40% அதிகரிக்கும் என்று இருதயநோய் நிபுணர் டாக்டர் கோதபயா ரணசிங்க கூறினார். உலகளாவிய ஆராய்ச்சியில்,  இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றரை  அடி வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.   

பேரிடர் மரணங்கள் உயர்ந்தன

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635  ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) திங்கட்கிழமை (08) அன்று தெரிவித்துள்ளது. அத்துடன், 192 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பண்ணை கடலில் மூழ்கி யாழ் நகர் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை (07) உயிரிழந்துள்ளனர். பண்ணை கடலில் நீந்த சென்ற நால்வர் நீரில் மூழ்கியுள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் நால்வரையும் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ;

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிரமதானம்.

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசசபைக்கு உட்பட்ட ஈச்சலம்பற்று வைத்தியசாலை, முத்துச்சேனை மகா வித்தியாலயம் , வெருகல் முருகன் ஆலயம் போன்ற இடங்களில் இன்று {07
12.25 தமிழர் சமூக ஜனநாயகக்கச்சியின் திருகோணமலை பிராந்திய அமைப்பு செயலாளர் தோழர் சின்ன மோகன் தலைமையில் ‘சமத்துவம் தொண்டர்படையினரால் சிரமதானம் சொய்யப்பட்டது.

பறக்க மறுக்கும் இன்டிகோ(IndiGo) நடுவானில் மக்கள்


(தோழர் ஜேம்ஸ்)

உலகின் அதிக சனத் தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாட்டிற்கு சொத்தமாக எந்த விமான சேவையும் தற்போது இல்லை என்பதில் இருந்து இந்த பதிவை ஆரம்பிக்கின்றேன்…

முழு இந்தியாவை… இந்திய அரசை… மண்டி போட வைத்தத ஏகபோகமாக இன்டிகோ. இதற்கான வாய்ப்பை வழங்கியது தற்போது ஆளும் அரசுதான். அதுவும் விமானப் பயணிகளின் உயிர்களைப் பயணம் வைத்து

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.


குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த மாகாண மற்றும் பிரதேச சபை வீதிகளின் புனரமைப்புப் பணிகள் அடுத்த 02 வாரங்களுக்குள் நிறைவு
இறுதி நுகர்வோர் வரை சேவைகளை பெற்றுக் கொடுப்பது அனைத்து சேவை வழங்குநர்களின் பொறுப்பாகும். கிணறுகளை சுத்தம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு தொடர்புடைய பிரதேச சபைகள் தலையிட வேண்டும்

உலகின் மிக உயரமான ஹோட்டல் திறப்பு

உலகின் மிக உயரமான ஹோட்டல் துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் வானளாவிய உயரத்துக்கு கட்ட திட்டமிடப்படவில்லை என்றும், தற்செயலாக நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்தனர்.