(சர்வசித்தன்)
கால நிலைகளால் கை மீறும் தேச வளர்ச்சி…!
சர்வதேசத்திடம் உதவி கோரும் ‘அனுர’…!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக்”இதழுக்கு…அனுர குமார திசநாயகா வழங்கிய இவ்வருட இறுதிக்கான நேர்காணலில்…’கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து நாடு ஏற்கனவே மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நேரத்தில், பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகிறது ‘ எனக் கூறியிருக்கிறார்.
