சென்ற மாத இறுதியில் நாட்டை உலுக்கிய ‘தித்வா’ சூறாவழி 600 க்கும் அதிகமன உயிரிழப்புகளையும்…இலட்சக்கணக்கான உடமை இழப்புகளையும் ஏற்படுத்தியதால் நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள்வரை நட்டம் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
காலநிலைப் பேரழிவுகளால் பாதிப்புற்றிருக்கும் நாடுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ‘வழங்கிய கடன்களை ‘நீக்குப் போக்கான’ வகையில் மீளப் பெறும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவர் தமது நேர்காணலின் போது ..அரசு 25 பில்லியன் டொலர் மறுசீரமைக்கப்பட்டது எனவும், 3 பில்லியன் டொலர் மன்னிப்பு வழ்ங்கப்பட்டதாயும் கூறியிருக்கிறார்.
இது உண்மையில் முன்னைய அரசுகளின் தொடர் செயல் பாடாகத்தான் தெரிகிறது, எனினும் அதனை ‘அரசு’ என்று பொதுப்படையாகக் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது..!
இந்தியாவின் உடனடி உதவிகளை மெச்சிய அதிபர் அண்டை நாடான இந்தியாவுடனான அதன் அருகாமை மற்றும் கலாச்சார உறவுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை ஒரு முக்கியமான புவிசார் அரசியல் நிலையைக் கொண்டுள்ளது,
ஆனால் அதன் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனாவுடன் நெருங்கிய உறவுகளையும் கொண்டுள்ளது –
அதன் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவை மறந்துவிடவில்லை. என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
‘ஒப்பரேசன் சாகர் பந்’ தின் வழியாக முதலில் உதவிக்குவந்த நாடு இந்தியாவே என்றும் .அதே போன்று சீனாவுடனும் ,அமெரிக்காவுடனும் கொண்டிருக்கும் உறவுகள் எமக்கு முக்கியம் எனவும்…சுட்டிக்காட்டிய அவர்,”எங்கள் ஒவ்வொரு உறவும் எங்களுக்கு முக்கியம். நாங்கள் அனைவருடனும் இணைந்து செயல்படுகிறோம், ஆனால் எப்போதும் ஒரே நோக்கத்துடன்” எனவும் கூறியுள்ளார்.
“கடன் பொறி ராஜதந்திரத்தின்” ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பாக ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கடன் வாங்கியது தொடர்பாக. இந்தத் திட்டங்களை நீண்டகாலமாக சீனா கட்டுப்படுத்தும் வாய்ப்பு, அவை இராணுவ நோக்கங்களுக்கு உதவும் என்ற அச்சத்தையும் பற்றிக் குறிப்பிடுகையில் …….
அவ்வாறான எதுவும் ஏற்படமாட்டாது எனவும் . “வெளிநாட்டு இராணுவ தளங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம், அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். துறைமுக நகரம் முதன்மையாக ஒரு வணிக வளர்ச்சியாகும்.
இது வேலைகளை உருவாக்கும், முதலீட்டை ஈர்க்கும் மற்றும் வருவாயை உருவாக்கும்,என்றும் அவர் கூறியிருந்தார்.
உள்நாட்டுப் போரின் போது நடந்த அட்டூழியங்கள் உட்பட கடந்த கால உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு செயல்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் நிபுணர்களுடன் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதுவும்…
நிறுவன ஊழலைப் பொறுத்தவரை, , நாம் இன்னும் போதுமானதைச் செய்யவில்லை என்பது போல் தெரிகிறது என்பதுவும் அவரது நேர்மையான பேச்சின் வெளிப்பாடாகவே கொள்ள முடிகிறது !
“உண்மையான வளங்கள் மற்றும் அதிகாரத்துடன் கூடிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை நாங்கள் உருவாக்குகிறோம். சிறந்த ரேடார் கவரேஜ் மூலம் எங்கள் முன்னறிவிப்பை மேம்படுத்துவோம். அதிக ஆபத்துள்ள பகுதிகளில் மீட்பு உபகரணங்கள் மற்றும் பொருட்களை நாங்கள் தயார் செய்து வருகிறோம். மத்திய மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை நாங்கள் வரைபடமாக்குகிறோம். நிச்சயமாக இந்த மாவட்டங்கள் ஏற்கனவே நிலச்சரிவுகளை சந்தித்துள்ளன. காலநிலை மாற்றத்தால், இந்த அளவிலான அழிவு சரியான நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக இலங்கை போதுமான அளவு தயாராகத் தவறிவிட்டது,” எபதை வலியுறுத்தும் அதிபரின் பேட்டி..
“எனவே, பொறியிலிருந்து வெளியேற ஒரு தப்பிக்கும் திட்டத்தை உருவாக்க எங்களுக்கு உதவுமாறு எங்கள் பன்நாட்டு உதவியாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
காலநிலை-எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்க எங்களுக்கு உதவுங்கள். இது முன்கூட்டியே அதிக செலவாகும், ஆனால் மீண்டும் மீண்டும் புனரமைப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.”
என்னும் வேண்டுகோளினை பன்னாட்டு அரசுகளிடம் விண்ணப்பிக்கும் வகையில் அவர் தனது நேர்காணலை நிறைவு செய்துள்ளார்.
இதில் அவர் குறிப்பிட்டிருக்கும்.
“உள் நாட்டுப் போரின் போது ஏற்பட்ட இழப்புகளும் அட்டூழியங்களும் அதிகம் பாதித்தது ‘இலங்கையர்’களாக இருக்கும் ‘தமிழர்களையே’ என்பது நிச்சயம் அவருக்குத் தெரிந்தே இருக்கும் …
இயற்கை அநர்த்தம் போன்று அவ்வித அட்டூழியங்கள் எதிர்பாராவிதமாக திடீரென உருவாவதில்லை என்பதுவும்…பல வருட திட்டமிடல்களின் மூலமாகவே ஒருவரை மற்றவர் ஒதுக்கும் நோக்குடன் அது படிபடியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதையும் அதிபர் அறிவார் என்றே நம்புகிறோம்.
‘நாம் எந்தவொரு மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்துக்கோ அல்லது சாதிக்கோ முன்னுரிமை வழங்கும் ‘இலங்கையர்கள்’ அல்ல… , இலங்கையில் வாழும் மானுடர்கள் நாம் எமக்கு மானுட விழுமியங்களே இவை அனைத்துக்கும் மேலாகப் படுகிறது…!
எனவே நாம் அனைவரும் இந்த மத, மொழி,இன, சாதி களைக் கடந்து செயல்படும் உலக மானுடராக மீளெழுவோம் என்னும் நம்பிக்கையோடு ‘அனுர’அவர்களின் எண்ணத்தை வரவேற்போம்..
படங்கள்..நன்றி..”நியூஸ் வீக்”