ஆரம்பத்தில் அரச எதிர்ப்பு சக்தி பாலியல் துஷ்பிரயோக குற்றசாட்டுக்கு உள்ளான ஆசிரியரியரின் படத்தை போட்டு அவரை NPP அமைப்பாளர் என்று பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்கள்.பிறகு தான் அவர்கள் டியூசன் உரிமையாளர் படத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த சிறுமி விடயத்தை பக்கச் சார்பற்ற முறையில் நியாயமாக விசாரணை செய்ய வேண்டும் இதில் சரோஜா போல்ராஜ் போன்ற பொறுப்பற்ற conflict escalation செய்வபர்களை பதவி விலக்க வேண்டும்.
ஆனால் இதை வைத்து அரசியல் செய்யும் சில்லறைகள் இந்த குற்றவாளிகளை விட கேவலமானவர்கள்.தனது 1000 மாவது consented+ ரேப்பை கொண்டாடிய தங்காலை நகர சபை குராம் சேக் சர்வதேச புகழ் மொட்டு இதில் கருத்து சொல்கிறது.
மொட்டோடு சமரசமாக இரவு நேரங்களில் கூடிக் குலவும் மோட்டு குழுக்கள் தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.உண்மையில் அந்த சிறுமியின் கல்லறையில் இவர்கள் தங்கள் அரசியல் கழிவுகளை கொட்டுகிறார்கள்.
ஹிஷாலினி விடயத்தில் குற்றஞ்சாட்டியவர்கள் அதற்கு எதிராக வக்காலத்து வாங்கியவர்கள் மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவகளை கசப்பாக்கி பின்னர் இப்போது ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.
சாயா விசயத்தில் தமிழ் முஸ்லிம் இரண்டு தரப்பினரும் மௌனமாக இருந்தார்கள் ஏனெனில் இது அவர்களின் பிரச்சனை இல்லை.
ஆஷிபா விடயத்தில் தமிழ் முஸ்லிம் இரண்டு தரப்பினரும் பிரிந்து அடிபட்டு கொண்டிருந்தார்கள்.இப்போது NPP பொது எதிரி என்பதால் ஒன்று கூடி கும்மியடிக்கிறார்கள்.
இவர்கள் நீதி நியாயம் எல்லாம் தங்கள் இனம் மதம் மொழி பிரதேசம் அரசியல் கட்சிகள் சார்ந்தது.
இந்த தீய பக்கச்சார்பே இலங்கைக்கு தீ வைத்தது.
இவர்களின் சோரம்போன குரல்களுக்கு மத்தியில் இந்த அனைத்தையும் கண்டித்த குரல்களும் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருக்கும். அவர்கள் பலர் தங்கள் சார்ந்த தரப்பால் துரோகிகளாக சித்தரிப்பட்டிருப்பார்கள்.
இப்போது தேசிய மயமாக்கப்பட்ட இந்த விடயம் மிக முக்கியமானது NPP பக்கச்சார்பற்ற ஆதாரபூர்வமான விசாரணைகளை விஷேட நீதிமன்றம் மூலம் நடத்தி நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்.
இதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணைத் திறனை கோருவதும் பிழையல்ல. ஏனெனில் அந்த டியூசன் உரிமையாளர் மீது பலயீனமான சோடனைகளை முன்னிறுத்தி உண்மை என்று மக்கள் மூளைச்சலவை செய்து வருகின்றனர்.
அந்த உரிமையாளரை அங்கு வேர் ஆணி வேறாக விசாரணை செய்ய வேண்டும். அவரது தொடர்பாடல் சமூகவலை செயற்பாடுகள் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
ஒரு NPP காரர் தவறு செய்தால் அதை கடுமையாக எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை அரசு பெற வேண்டும்.
நீதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள்.கள்ளர் கூட்டம் தாங்கள் இவ்வளவு காலமும் தங்கள் அடிவருடிகள் மூலம் சட்டத்தோடு விளையாடிவிட்டு இப்போது தான் பகுதியளவு முறையான நீதியான அரச அதிகாரிகள் விசாரணைக்கு உள்ளாகி கொஞ்சம் கொஞ்சமாக சிக்கி வருகிறார்கள்.
இதை தாங்க முடியாமல் கயவர் கூட்டம் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களை குழப்பி நாட்டை குழப்பி எப்படியாவது சாத்தோனோடு சேர்ந்தாவது அரசை கவிழ்க்க சந்தர்ப்பம் தேடுகிறார்கள்.
அதேநேரத்தில் கடந்த அரசுகள் போல நீதித்துறையில் தலையிடாது சுதந்திரமாக செயற்படவிட்டு இந்த குற்றவாளிகளை தண்டனை பெற வைக்க முடியாது.
இவர்கள் எல்லா இடங்களிலும் அல்லக்கை அடியாட்கள் சிலீப்பர் செல் வைத்து நீதியாக நேர்மையாக செயற்படும் அதிகாரிகளுக்கு தடை போடுகிறார்கள்.
ஒரு வேளை இவர்கள் எதிர்காலத்தில் வென்று அதிகாரத்தை கைப்பற்றினால் உண்மையில் இந்த நேர்மையான அரச அதிகாரிகளின் வாழ்வை நரகம் ஆக்குவார்கள்.
மாறி மாறி அரசியல் ரீதியாக பழிவாங்குவது இலங்கையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் நடைபெற்ற சாதாரண விடயம். இப்போது அனைவரும் மறந்து விட்டார்கள்.
தற்போது நடப்பது அரசியல் பழிவாங்கள் இல்லை என்பதை கடந்த மூன்று தேர்தல்கள் வெளிப்படையாக காட்டுகிறது.
இதுவரை அனுர குமார இதய சுத்தியுடன் செயற்படும் தலைவர். அவருக்கு எதிராக பெரும் பொய்யர்கள் அவரை பொய்யர் என்கிறார்கள். இவை அனைத்தும் ஜேவிபி இடதுசாரி கொள்கையில் இருந்து தேசிய நலனுக்காக வலதுசாரி இயக்கத்தை அனுசரித்து போக வேண்டிய பின்னணியில் உருவானது.
அல்லது இந்த தீய சக்திகள் முழுமையாக ” இடதுசாரி” அரசியல் பொருளாதார கொள்கையை விரும்பினால், அந்த “பச” எல்லாம் சூளையில் “செந்தீயில்” சுட்ட செங்கற்கள் போல உண்மையாக மாறும்.
அவ்வாறான மாற்றம் ஒன்றிற்கு மக்களாணையை மக்கள் அளிக்கவில்லை.அதை NPP புரிந்தே வைத்திருக்கிறார்கள்.
இடதுசாரி கட்டமைப்பில் ஜனநாயக சூன்யம் காரணமாக சட்டத்தின் ஆட்சி, மறுசீரமைப்பு, தேசிய கொள்கைகள், உறுதியான அரசாங்கம், உறுதியான உற்பத்தி பொருளாதாரம் உருவாக்குவது இலகுவானது.
ஆனால் உலகத்தில் மிக நீண்ட ஜனநாயக அனுபத்தை கொண்ட இலங்கை அவ்வாறான மாற்றம் ஒன்றிற்கு தயாராக இல்லை எனவே தயவு செய்து சில்லறைகள் அவர்களை அந்த நிலைக்கு தள்ளி விடாதீர்கள்.
எனவே அரசியல்”கௌசிக்களே ” “நந்திகளே”ஜனநாயக வெளியில் அவர்கள் இயங்கும் சுதந்திரத்தை கொடுங்கள்.அரசை நியாயமாக விமர்சனம் செய்யுங்கள் ஆனால் உங்கள் வழக்கமான இழிந்த அரசிலை காட்டாதீர்கள்.
இறுதியாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய சராசரியாக வாராந்தம் 10 க்கும் குறையாத பாலியல் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்ட சிறுவர்களை பரிசோதனை செய்து மருத்துவ அறிக்கை சமர்பித்த வகையில் சொல்கிறேன் இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணித்தரமாக கூறுகிறேன்.
தண்டனைகள் கடுமையாக்கப்படும் வரை குற்றங்களை குறைக்க முடியாது.