இதற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவமாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் , கால்நடைகளை கொல்லாதே ! அரசே வேடிக்கை பார்க்காதே ! உரிமைக்காக குரல்கொடுப்போம் ! இரண்டு வருடங்கள் கடந்தும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன், பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை வழங்கு என்று பல்வேறு கோஷங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இ.சாணக்கியன் , பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.