தமிழரசுக் கட்சி இடறிய இடத்தில் வெற்றிபெற்ற மணிவண்ணன்

(புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக, விஸ்வலிங்கம் மணிவண்ணன், டிசெம்பர் 30ஆம் திகதி தெரிவானார். மேயருக்கான போட்டியில், முன்னாள் மேயரான இம்மானுவேல் ஆர்னோல்டை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார்.