’கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா விலை செலுத்திவேண்டியிருக்கும்’

கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 32 பலி பலி: 10 பேருக்கு ஆபத்து

பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மாபெரும் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 10 பேர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பாதிப்பு

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக கண்டிபொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பெரிய சுவரொன்றை நிர்மாணிப்பதற்காக மண் மேடொன்ற வெட்டும் போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்ணில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கண்டிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை

 ஓகஸ்ட் மாதத்திற்காக எரிபொருள் விலைகளில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என. இலங்கை கனிசவளக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா அறிவித்துள்ளார்

’பிரதேச நிர்வாக அலகுகளை, அபிவிருத்தி அலகுகளாக மாற்றுக’

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மஹர சிறையில் பதற்றம்: முக்கிய பிரிவுகளுக்கு தீ வைப்பு

மஹர சிறைச்சாலைக்குள் ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நிலைமையை ஆராய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கைதிகள் பதிவுப் பிரிவு மற்றும் கைதிகள் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கத்துக்கான வேட்டையைத் தொடரும் ருமேஷ் தரங்க

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்டையை இலங்கையின் ருமேஷ் தரங்க தொடர்ந்த வண்ணம் உள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிகாண் சுற்றில் 82.84 மீற்றர் தூரம் எறிந்து முதலாமிடம் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீற்றர் தூரம் எறிந்து ஐந்தாமிடத்தைப் பெற்றும், பாகிஸ்தானின் அர்ஷாட் நதீம் 82.84 மீற்றர் தூரம் எறிந்து ஏழாமிடம் பெற்றும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.