தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மற்றொரு திருகுதாளம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

நாடு எங்கே செல்கிறது என்பது, ஒருவருக்கும் தெரியாது. மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள், எத்தனை ஆண்டுகளில் தீரும் என்றும் கூற முடியாத நிலை உருவாகியிருக்கிறது. பிரச்சினைகள் தீராதது மட்டுமல்ல; அவை நாளாந்தம் வரலாற்றில் ஒருபோதும் காணாத வேகத்தில் அதிகரித்தும் செல்கின்றன.