புதிய நாடாளுமன்றம்: பா.ஜ.க – காங்கிரஸ் இணைந்து செய‌ற்படுமா?

(எம். காசிநாதன்)
இன்று திங்கட்கிழமை (17), 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி தொடங்குகிறது.