விடை கொடுக்க மனமின்றி விடை கொடுக்கின்றோம்…..!

(தோழர் ஜேம்ஸ்)

‘தோழர் சென்னை வருகின்றேன் அடுத்த மாதம் கிராமங்களை நோக்கி பயணித்து அந்த மக்களுடன் பழக வேண்டும்….” என்றேன். இது இரு வருடங்களுக்கு முன்பு…

நாற்பது வருட கால தோழமை கலந்த நட்பு ‘வாருங்கள் தோழரே போவோம் கிராமங்களை சுற்றிப்பார்போம் நண்பர்கள் குழாமாக…”