இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல- ஹிஸ்புல்லா

இலங்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல… நானே தான்…முன்னாள் இலங்கை முஸ்லீம் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் இரகசிய வீடியோ.

1990 காலப்பகுதியில் ஓட்டமாவடி, காத்தான்குடி, ஏறாவூர் போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் இயங்கிய சட்டவிரோதமான முஸ்லீம் ஆயுதக்குழுக்களினால் அதனை அண்டிய கிராமங்களில் வாழ்ந்த பல தமிழ்ப் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டர்கள். பல குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டர்கள். வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன.

பாரம்பரியமாக அக்கிராமங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள்.
கொக்குவில் மற்றும் முத்துகலை கிராமங்களில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் குழந்தைகள் ஈவிரக்கமில்லாமல் வெட்டியும் அறுத்தும் படுகொலை செய்யப்பட்டதற்கும் வாழைச்சேனை , ஓட்டமாவடி, ஏறாவூர் ,காத்தான்குடி ஆகிய கிராமங்களில் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கும் பஸ் வண்டியில் பயணம் செய்தவர்கள் பஸ் வண்டியுடன் கடத்தப்பட்டு காத்தான்குடி முதலாம் குறிச்சியில் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டதற்கும் புனித மிக்கேல் கல்லூரியின் வளர்ச்சிக்கும் கூடைப் பந்தாட்ட வளர்ச்சிக்கும் அயராது உழைத்த வண. பிதா . ஹேவியர் ஏறாவூரில் கடத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கும் பாடசாலை அதிபர் இராஜேந்திரம் அவர்கள் காத்தான்குடியில் கடத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கும் இப்படிப்பட்ட முஸ்’லீம் சட்ட விரோத ஆயுதக்குழுக்களே காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

அவ்வாறிருக்கையில் முஸ்லீம் இளைஞர்களுக்கு நூற்றுக்கணக்கில் ஆயுதங்களைக் கொடுத்தது வேறு எவருமல்ல… நானே தான்… அதுமட்டுமல்ல முஸ்லீம் ஆயுதக்குழுக்களு
க்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்டதும் நானே தான்… என வெற்றிலைச் சின்னத்தில் போட்டி போடும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் காட்சிகளைக் கூட இந்த வீடியோக்களில் காண முடிகின்றது.
https://www.facebook.com/Hindusm1st/videos/902403973130534/