கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உட்பட பல்வேறு பொருட்களுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார்.