பவித்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் 353 பேருக்கு தொற்று உறுதி

கம்பஹா மாவட்டத்தில் இன்று (23) 167 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் கம்பஹாவில் 10 ஆயிரத்து 524 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு 150,178 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன், பிசிஆர் பரிசோதனைகள் இரண்டிலும் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவித்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று (23) வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் மூன்று அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.