விடுதலைப் புலிகளை ஏறி மிதித்த கபாலி??

அண்மையில் கபாலி திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். தேவையற்ற நிகழ்வுகளுக்காக நாம் அளவுக்கதிகமாக பரபரப்பை உண்டாக்குகிறோம், அதில் நாமும் பங்கேற்கிறோம் என்கிற குற்ற உணர்வையே இப்படம் நாளடைவில் எமக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றம் இல்லை. கபாலி திரைப்படம், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததால் ஒரு மாபெரும் நிகழ்வாக பார்க்கப்பட்டது. கதை கேட்டு வளர்ந்த தமிழகத்தில், உச்ச நடிகரான ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பு இயல்பானதே!

திரைப்படங்களில் இருந்து புரட்சியையோ, சமூக விடுதலையையோ, வேறு எந்த ஒரு மாபெரும் கருத்தையோ தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்பது ‘ஒரு பொழுதுபோக்கு’ மட்டுமே.

அவற்றில் ரைகர் எனும் ஒரு கதா பாத்திரம் உருவாக்கப் பட்டதை யாரும் மறுக்க மாட்டீர்கள் இந்தப் பெயர் எதற்காக?? யாருக்காக இது தேவையா?

அன்று தொடக்கம் இன்று வரை ரஜனி ஈழத் தமிழ் மக்களுக்கோ அல்லது விடுதலைப் புலிகளுக்கோ சிறிதளவும் ஆதரவாக இருந்தவர் இல்லை…!!!

ஒட்டு மொத்த உலகமே இன்று ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உயர்வாக பார்க்கும் நிலையில் இந்திய அரசு இன்று வரை புலிகள் மீதான தடையை நீடிக்கிறது.

தொடர்ச்சியாக தமிழகம் தவிர்ந்த மற்றைய அனைத்து மாநலங்களிலும் புலிகளுக்கு எதிரான நிலை.

ரஜனியை இறுதியில் சுடுபவருக்கு எதற்காக ரைகர் என பெயரிட வேண்டும்!! 1983க்கு முன்னர் இப் பெயரை யாரும் பயன் படுத்தலாம். அதன் பின் இப் பெயரைப் பயன்படுத்துவதற்கு ஒரு வரையரை வேண்டும்.

விடுதலைப் புலிகளை தீண்டப்படாதவர்களாக பார்க்கும் இந்தியாவில் தொடர்ச்சியான இப்படியான கருத்துருவாக்கம் புலிகளை இன்னும் கொடியவர்களாக அல்லவா காட்டும்…!!

அப்படியாயின் படத்தில் இப் பெயரிற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்தி இருக்கலாம்… ஏன் இந்தப் பெயர் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தவா?? இது தமிழகத்தின் உணர்வாளர்கள் கண்களுக்குத் தெரிய வில்லையா??

ஈழத்தில் இருந்து வந்து தமிழகத்தில் ஒய்யாரமாக வாழ்ந்து வரும் ஒரு சிலர் நாளை தமிழீழம்!! நாளை மறுதினம் பிரபாகரன் வருவான்!! என தமிழர்களை ஏமாற்றி வெளிநாட்டுப் பணத்தில் தமிழகத்தை சுற்றி ஈழத் தமிழரை நாசமாக்கும் தேசிய வாதிகளுக்கு தெரியவில்லையா….???

மற்றவர்களின் அறிக்கையில் இலக்கணப் பிழை சொற் பிழை பிடிக்கும் இவர்களுக்கு இது ரெியவில்லையா…

ஒட்டு மொத்தத்தில் கபாலி விடுதலைப் புலிகளை பாரிய அளவில் பாதித்திருக்கிறது. இதற்கு என்ன பதில் உள்ளது?? உலகத் தமிழரே அல்லது அது எல்லாம் சும்மா கபாலியில் சுப்பஸ்ரார் சுப்பர் என கைதட்டலுடன் முடிந்து விட்டதா….