அமெரிக்க ஜனநாயகம் இருண்ட யுகத்தைநோக்கி

(சுகு-ஸ்ரீதரன்)

அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்மின் வெற்றி இனவாதம் -நிறவாதம் -பெண்களை இழிவுசெய்தல் -கீழ்மைப்படுத்துதல் அதிகார அகங்காரம் -புவி வெப்பமாதல் தொடர்பான அலட்சியம்-இராணுவவாதம் -ஏகாதிபத்தியவாதம் எல்லாம் கலந்து வெள்ளை குறுந்தேசியவாதத்தின் கதம்பமாகவே அமைந்திருக்கிறது.

ஓபாமாவை இரு தடவை அதிபராக்கிய அமெரிக்கர்கள் இம்முறை மிக மோசமான வலது வகைப்பட்ட அதிகார அகங்காரம் கொண்ட ஒருவரை அதிபராக்கியுள்ளனர். உலகமக்கள் தொடர்பாக மேலாதிக்க அகங்காரம் கொண்ட அமெரிக்க வெள்ளை குறுந்தேசியவாதம் வெற்றி பெற்றிருக்கிறது.

அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் 1930களின் முற்பகுதி ஹிட்லரின் தேசியவாத சோசலிசச் சாயலுடனேயே ட்ரம்மின் எழுச்சி காணப்படுகிறது.

அறிவார்ந்த சமூக நேயம் கொண்ட எதுவும் ட்ரம்மின் தெரிவில் காணப்படவில்லை.

மிகவும் விபரீதமான ஆபத்தான ஒரு போக்கு வெற்றி பெற்றிருக்கிறது.

3 ஆம் உலகநாடுகள் ,ஆசிய – ஆபிரிக்க -லத்தீன் அமெரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்யது வரலாற்று அவசியமாக எழுந்துள்ளது. சுpல விதிவிலக்குகள் இருந்தாலும்

ட்ரம் அமெரிக்க வெள்ளை குறுந்தேசியவாதத்தின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட பிரதிநிதி.

சகிப்புத்தன்மைக்கு விரோதமானவர்.

மனித குலம் காலாதி காலம் சம்பாதித்துவந்த அறவிழுமியங்களுக்கு எதிரானவர். அதனை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் எந்த மனக் கிலேசமும் அற்றவர்.

உலகளாவிய அளவில் அமெரிக்காவின் நண்பர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட முகஞ்சுழிக்கும் அதிர்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனநாயகம் இம்முறை பல்லின பாங்குடைய விளைவைத்தரவில்லை.

அமெரிக்க பேரினவாதம் மீள் எழுச்சி பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே கனடாவின் குடிவரவு குடியகல்வு இணையம் அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு குடிபெயரவிரும்புவோரின் நெருக்கடியால் திணறுகிறது

நவதாராளவாதம் உலகமயமாக்கம் முதலாளிகளுக்கு தாயகம் இல்லாமல் ஆக்கியது.

அமெரிக்க முதலாளிகள் உலகளாவிய அளவில் முதலீடு செய்தார்கள் .அங்கங்கே வேலைக்கும் ஆட்களை எடுத்துக் கொண்டார்கள் இப்போது .அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை அமெரிக்கர்கள் தவிர்ந்த யார்யாரோ எல்லாம் அபகரித்து விட்டதாக தனது தேர்தல் பிரச்சாரங்களில் ட்ரம் சொல்லி வந்தார்.

ஆனால் அந்த யார் யாரோ எல்லா போய்விட்டால் அமெரிக்க பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கித் திணறும்.

ஆனால் ட்ரம்மின் அரசியல் முதலாளிகளுக்கும் தாயகம் உண்டென்று அமெரிக்க வெள்ளை தேசியவாதத்தினுள் தன்னை நத்தை ஓட்டுக்குள் போல் சுருக்கிக் கொண்டது.

பேய்த்தனமானதும் ,அபாயகரமானதுமான மனித குல இருப்பு ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக தலையெடுத்துள்ளது.

ரம்மின் வருகை பாரம்பரியமான ஐரோப்பிய மற்றும் நண்பர்களுடனும் மோதல்கள் முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

கியூபாவுடன் அண்மையில் ஏற்படுத்தப்பட உறவுகள் சீர்குலையும்

எதுவித ஆவணங்களும் இல்லாமல் அமெரிக்காவில் வாழும் மில்லியன் கணக்கான மெக்சிக்கோ மற்றும் மக்களை வெளியேற்றுவது

மெக்சிக்கோ எல்லையில் பிரமாண்டமான வேலி அமைப்பது

முஸ்லீம்களின் வருகையைத் தடைசெய்வது

பெண்களின் உரிமைகளில் தலையீடு செய்வது

புவி வெப்பமடைந்து பாரிஸ் உடன்பாடு தொடர்பான அலட்சியம்

உலகத்தை பாதுகாப்பற்ற உணர்வுக்குள் தள்ளுவது

உலகத்தாரோடு சேர்ந்து வாழ விரும்பாத பொருளாதாரத்தையோ உரிமைகளையே சகமனிதர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாத ஆபத்தான கூட்டம் ஒன்று உருவாகியிருக்கிறது.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு பிரித்தானிய மைய குறுந்தேசியவாதம் -ஸ்கொட்லாந்து வட அயர்லாந்து போன்றன அதற்கு விதிவிலக்கு-அதற்கு ஒரு படி மேலாக உலகளாவிய தார்மீக விழுமியங்கள் சகிப்புத்தன்மையைப் புறக்கணித்து அமெரிக்க வங்கிறோத்து ஜனநாயம் செயற்பட்டுள்ளது.

அமெரிக்க மையவாதம் ட்ரம்மின் தேர்தல் பரப்புரைகளில் எதிரொலித்தது.

ட்ரம்மின் அடாவடியான கருத்துக்கள் நடைமுறைகள் பெருவாரியான அமெரிக்க வாக்காளர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை . இது அதிர்ச்சியளிப்பது.

ஐரோப்பா உலகின் பிற பகுதிகளில் உள்ள இனவாத நிறவெறி மற்றும் அடிப்படைவாத சக்திகள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளன. பிரான்சின் மரியா லிபென் போன்றவர்கள் தமது எதிர்காலம் பற்றி பெருநம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

தீவிர வலதுசாரிகள் உலகை ஆக்கிரமிக்கிறார்கள்

பாரிய அளவிலான யுத்தங்கள் வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன

எதுவித தர்க்க நெறிமுறைகளும் இல்லாத எடுத்தெறியும் இயல்பு கொண்ட ட்ரம் – அவரின் பரிவாரங்களுடனும் சமாளிப்பதில் உலகநாடுகள் பெரும் ராஜதந்திர நெருக்கடிகளை எதிர் நோக்கும் . அமெரிக்காவிற்கும் இது விதிவிலக்கல்ல.

இழந்த பெருமைகளை மீட்பது அமெரிக்கர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது என்பனவெல்லாம் அமெரிக்க வெள்ளை குறுந்தேசிய வகைப்பட்ட கனவுகள்.

உலகில் வெவ்வேறு வல்லமைகளாக நாடுகள் உருப்பெறுவதும் அமெரிக்காவை உறுத்துகிறது.

ஆக்கிரமிப்பு யுத்த சகதியில் சிக்குண்டிருக்கிறார்கள்.

ஹிட்லரும் ஜேர்மனியின் இழந்த பெருமைகளை மீட்பதாகத்தான் ஜேர்மன் தேசியவாதக் கட்சியை ஸ்தாபித்தார்.

உலகை அச்சுறுத்திக் கொண்டு உலகமானிடத்தை வெறுத்துக் கொண்டு அமெரிக்கா தனித்தீவாக செயற்படுவதே ட்ரம்மின் நிலைப்பாடாகும்.

முன்னேற்றகரமாக எதையுமே சிந்திக்கத் தெரியாத மனிதனை அமெரிக்கர்கள் தெரிவு செய்துள்ளனர்.

அது உலகத்திற்கு மாத்திரமல்ல ,அமெரிக்காவிற்கும் ஆபத்தானது.

ரஸ்சிய அதிபர் புட்டடின் பற்றி ட்ரம்மின் அபிப்பிராயங்கள் ஜனநாயகம் தொடர்பானவை அல்ல. அதிகாரம் தொடர்பானவை

அமெரிக்க ஜனநாயகம் ஈடாட்டம் கண்டுள்ளது.

ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகள் ,நவதாராளவாதம், இராணுவவாதம், தீவிர நுகர்வுக் கலாச்சாரம் என்பன கடுமையான பிற்போக்கான தேசியவாத சக்திகளை உற்பத்தி செய்திருக்கிறது.

உலகம் ஆழமான பிளவை நோக்கியும் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை நோக்கியும் தள்ளப்பட்டுக் கொண்டிருகிறது

ஆனாலும் அமெரிக்காவால் உலகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய ஒழுங்கு ஏதோ ஒருவகையில் தகரவும் போகிறது. அது நல்ல சகுனமே. புதிய உலக ஒழுங்கு உருவாவதற்கு இந்த தகர்வு அவசியமானது. இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் உலகத் தலைமையாக தன்னை வரிந்து கொண்ட அமெரிக்காவிற்கு சோவியத்யூனியன் 40 ஆண்டுகள் சவாலாக இருந்தது.

முதலாளித்துவம் தனக்குரிய சவக்குழியை தானே வெட்டும் என்பது இன்றளவும் உண்மையாகத்தான் இருக்கிறது.

முற்பகல்செய்யின் பிற்பகல் விளையும் என்பதுபோல

1990 சோவியத் முகாமின் தகர்ப்பு தொடர்ந்து அணி சேரா இயக்கத்தின் நலிவு.

ரஸ்சியாவிற்கு போரிஸ் ஜெல்சின் என்ற நயவஞ்சக கோமாளியைத் தலைவராக்கி அதனை நாசமாக்கினார்கள். தற்போது அமெரிக்காவிற்கு ட்ரம்

தற்போது நிலவும் நவதாராளவாத உற்பத்தி உறவு முறைகள் அரசியல் முறைமைகளின் உழுத்துப்போன தன்மையையே ரம்மின் தெரிவு புலப்படுத்துகிறது. மக்களும்

இலங்கை போன்ற நாடுகளில் நேரடி முதலீடுகள்- அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் -மனித உரிமை தொடர்பான ஐ. நாவின் செயற்பாடுகளில் தாக்கங்கள் தலையீடுகள் தீவிரமடையலாம். தென்னாசியா உட்பட உலகளாவிய அளவில் பாரய அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு நெருக்கடிகளுக்கு இடமிருக்கிறது

அழிவுகள் இழப்புக்கள் ஊடாக வரலாறு தன்னை சரிசெய்து கொள்ளும.; உலகம் நேர்த்தியான பாதையில் பயணிக்கும்.

சுகு-ஸ்ரீதரன்