இலங்கையின் நுகேகொடை அரசியல்

இதில் அனைத்து எதிர் கட்சிகளையும் ஒருங்கிணையுமாறு அழைப்பு விடுத்தது மட்டும் அல்ல பல்வேறு கட்சிகளின் தலமைகளுடனும் நேரடிப் பேச்சுவார்தையில் ஈடுபட்டது சிறீலங்கா பொது ஜன பெரமுன கட்சி
மஹிந்தாவும் அவரின் சகோதரர்களும் அரகலய போராட்டத்தின் பின்னரான கால கட்டங்களில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் முன்னிலைக்கு வந்து அதிகம் செயற்படாத நிலையில் நாமல் ராஜபக்ச இளம் தலைவராக இந்தத் தேர்தல்களில் அதிகம் பங்கு பற்றினார்.


மக்களின் மிகக் குறைந்தளவு ஆதரவையும் அவர் பெற்றுக் கொண்டார். இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை அவரையும் பாரளுமன்றத்திற்குள் எடுத்தும் கொண்டது.


போராட்டதிற்கான பொது அறைகூவல் தனித்தனியான சந்திப்புகளில் அதிகளவு ஆர்வத்துடன் எதிர்கட்சிகள் ஈடுபடவில்லை.
கூடவே தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான எதிர் கட்சிகளின் கூட்டம் என்ற கோசத்திலும் எதிர் கட்சிகளுக்கு அதிகம் உடன்பாடு இல்லாமல் போனதால் இந்த கூட்டத்திற்கு அறை கூவல் விடுத்து ஆரம்பத்தில் முன்வைத்த கோசத்தை சிறீலங்கா பொது சன பெரமுன மாற்றியமைக்கவும் வேண்டியதாயிற்று


அது ‘தேசிய மக்கள் சக்தி அரசே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று’ என்று ‘எதிர்ப்பு நிலை’ என்பதை ‘கோரிக்கை’ என்றாக மாற்றியமைகவும்பட்டது.


இன்னொரு வகையில் சொல்வது என்றால் நாமலின் தந்தை வீச்சாக செயற்பட்ட காலத்தில்… 2015ல் இதே மாதிரி மஹிந்த நடத்திய கூட்டத்திற்கு “Mahinda Sulanga” (மஹிந்த காற்று/புயல்) என்றாக இருந்தது


இன்று அது ‘மஹிந்த புயல்’ ‘நாமல் குரல்’ என்றாகி ‘புயல்’ ‘குரல்’ ஆகி வீச்சும் குறைந்துவிட்டது.


அதாவது “Maha Jana Hantha” (Mega People’s Voice). (மாபெரும் மக்கள் குரல்)(Mega People’s Voice). என்ற கோசத்துடனேயே இன்றைய கூட்டம் களம் கண்டது.


இதற்கு சற்று சாதகமான பதில்கள் ஏனைய எதிர்கட்சிகளிடம் இருந்து கிடைத்ன. குறைந்த பட்சமாக எதிர்கட்சிகளிடம் இருந்து வாய் வழி ஆதரவு கிடைத்து.


ஆனால் அது அந்தந்த எதிர் கட்சிகளின் தலைவர்கள் நேரடியாக போராட்தில் கலந்து கொள்ளாமல் தமது பிரதிநிதிகளை அல்லது தமது போராட்டச் செய்திகளை மட்டும் அனுப்பி வைத்தனர்

இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த பொது சன பெர முன இறுதியில் எடுத்துக் கொண்ட ஆயுதம் திருகொணமலையில் புத்தர் சிலையை எடுத்தல்… வைத்தல்… என்றான பௌத்த மத பேரினவாதம்.

அதுவும் அந்த சிலை வைகப்பட்ட இடம் சம்மந்தமான உரிமம் கடற்கரையிற்கு அண்மையாக கட்டம் அமைக்கப்படக் கூடாது என்தான சட்டச் சிக்கலகள் என்றாகவும் பௌத்த மதத் துறவி ஒருவரின் தனிபட்ட காணி என்றவான பல குளறுபடிகளை தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாக அனுரா சிறப்பாக பாராளுமன்றத்தில் நீதி மன்றம் அதற்கான தீர்வினை வழங்கும் என்றாக எரியவிடாமல் தடுத்தும் விட்டார்.

அது சமான்ய சிங்கள மக்கள மத்தியில் பௌத்த மதத்திற்கு எதிரான செயற்பாடாக கட்மைக்க முயன்ற பொது சன ஐக்கய முன்ணியிற்கும் பௌத் மத்தை காப்பாற்றுபவன் நான்தான் என்று தனது உண்மையான வலதுசாரி பேரினவாத ஜேஆர் பிரேமதாச சிந்தனையை வெளிப்படுத்தி சஜித் தன்னை அம்பலப்படுத்தியும் கொண்டார்.

இந்நிலையில்தான் இன்று அரசுக்கு எதிரான கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட சுலோகங்கள் அதிக் மேல் எழுந்து வரவில்லை தெரியவில்லை.

ஆனால் நாமல் ராஜபக்ச பேசும் போது தாங்கள் மக்கள் ஆதரவைக் கட்டி எழுப்புவதாகவும். அரசுக்கு எதிரான அழுத்தங்களை திரட்டி அடுத்து தமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்திலேயே தற்போதைய ஆட்சியை அகற்றி விடப் போவதாகவும் சூழுரைத்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே நடப்பு வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடரில் மலையகக் கட்சிகளும் கொழும்பு வாழ் மேலக தமிழ் கட்சிகளும் மலையக மக்களுக்கு அரசு வழங்கிய ரூ 200 சக ரூ 200 என்றான சம்பள உயர்வை ஆரம்பத்தில் பலவேறு வடிவங்களில் எதிர்தனர்.

இது மலையக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தன. மலையக மக்கள் இந்த தலைவர்களுக்கு எதிராக கொடும்பாவி எதிர்ப்புக்களைச் செய்தனர்.

அதனால் இந்த எதிர் கட்சிகள் சில மலையக மக்களுக்கான சம்பள உயர்வு அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு போன்ற அரசின் திட்டங்களுக்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டதிற்கு ஆதரவு தெரிவித்து பகிரங்கமாக வாக்களித்தனர்.

இது அரசுக்கு ஆதரவான நிலையை மேலும் பாராளுமன்றத்திலும் நாட்டிலும் ஏற்படுத்திவிட்டது.

உண்மையில் கடந்த ஆட்சிக் காலங்களில் தாம் அனுபவித்து அரச பணத்தின் சுகங்கள் ஆடம்பரங்கள் வசதிகள் என்றான விடயங்களை மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தி தற்போதைய அரசு நிறுத்தியது.

மேலும் கடந்த ஆட்சிகளின் போது அவர்கள் ஈடுபட்ட ஊழல்கள், பண மேசடிகள் என்னவற்றால் சட்டத்தின் பிடியில் மாட்டுப்பட்டுவிடுவோம் என்ற பயப்பிராந்திதான் இந்த அரசு எதிர்ப்பு போராட்டத்திற்கான அறை கூவல்.

இதில் நிபந்தனை இல்லாமல் இணைவது சிறீலங்கா பொது சன பெரமுன இன் கடந்த காலத் தவறுகளுக்கு தாமும் பொறுப்பு கூறுபவர்களாக ஆகிவிடுமோ என்பதுடன் தாம் மேற்கொண்ட தவறான அதிகாரத் துஸ்பிரயோகம் ஊழல் செயற்பாடுகளும் வேகமாக நீதித்துறையால் அணுகப்பட்டுவிடுமொ என்ற பயமும் காணரமாயிற்று.

இதற்கு அப்பால் இதில் திரளும் மக்களின் ஆதரவை சிறீலங்கா பொது சன பெரமுன தனக்கான ஆதரவாகவே காட்ட முயன்று அதற்கான பலனை எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பை இது ஏற்படுத்திவிடும் என்பதினால் தயக்கம் காட்டினர்.

இதற்கு அப்பால் பொது சன ஐக்கிய முன்னணியில் பல முக்கிய தலைவர்கள் ஹெகல ரம்புகல போன்றவர்கள் சிறையில் கம்பி எண்ணுவதினால் அந்த பழைய அடாவடித்தனமான அரசியல் கூட்டங்களையும் நடத்தவும் அதற்கு கணக்கு காட்டாத பணத்தை செலவளித்து ஆட்களை அணிதரட்டவும் முடியவில்லை.

இதனையும் மீறீ தானாக சேர்ந்த கூட்டமாக சிலரும் கொண்டவந்த கூட்டமாக பலரும் சில ஆயிரங்களுக்குள் இந்த கூட்டம் ஆகாயத்தில் இருந்து எடுத்த கமராக்களால் அதிக தலைகள் உள்ளதாக காட்சிப்படுதப்பட்டதே உண்மை.

இந்த தானாக சேர்ந்த கூட்டத்தில் 2009 மே 18 ல் இல் யுத்தத்தை முடித்து இதற்கு முன்பு சிங்களக் கிராமங்களில் எப்பவும் வரலாம் ஒரு பிரோதப் பெட்டி வன்னியில் இருந்து என்றான நிலமையை எற்படுத்தியவர் எங்கள் மகிந்த வீரையா என்ற விசுவாசங்களும் உண்டு.

ஆனால் அரகலய போராட்டதின் போது வீட்டிற்கு வெளியே வராமல் ஒழித்து நின்ற ராஜபக்ச ஆட்சியாளர்கள், அவர்களின் கூட்டாளிகள் இம்முறை வீதியிற்கு வந்திருக்கின்றார்கள் என்பது அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கும்.

இந்த கூட்டத்திற்கான எந்த தடையையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசு முன்வைக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

விதிவிலக்காக ஒன்றைத் தவிர…. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக பாடசாலைகளில் நடைபெற்ற கபொத உயர்தர பரீட்சையிற்கு இடையூறுகள் ஏற்புடத்தாத வகையில் பேக்குவரத்து ஒலி பெருக்கி என்பனவற்றை மட்டும் மட்டுப்படுத்தி அனுமதி வழங்கி இருந்தனர்.

இக் கூட்டத்தில் நாமலின் பேசு;சு நகைப்பிற்கு இடமாக…. நீதி மன்றங்களுக்கு அழுதம் கொடுகின்றது அரசு, அரச வளங்களை சுகங்களாக அனுபவிக்கும் அரசு, ஆட்சியைக் கவிழ்போம் இன்னும் சில காலத்தில் என்பது போன்ற பேச்சுகள் அமைந்தது அல்லாமல் இவை மக்கள் மத்தியில் அதிகம் எடுபடவில்லை.

நாமல் ராஜபக்ச தமது கடந்த கால ஆட்சிகளினால் ‘அப்பாக்களும்’… ‘…பெரியப்பாகளும்’… ‘சித்தப்பாகளும்’…. விட்டுச் சென்ற அழுக்குகளை ‘நீங்கள் ஏன் இன்னும் துடைக்கவில்லை என்றான’ குற்றச்சாட்டுகளை தற்போதைய அரசிடம் முன்வைத்தாக உணர முடிகின்றது.

அதனால் கூட்டம் மெதுவாக கலையவும் தொடங்கிவிட்டது.

மஹிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் அவரின் வீச்சுக் குரல் இங்கு ஒலிக்கப்படாததும் இங்கு உணரப்பட்டது

கூட்டமும் அதிகம் வரவில்லை எழுச்சியும் பெறவில்லை என்பது ஆளும் அரசிற்கு அதிகம் எதிர்ப்பு இல்லை மக்களிடம் அரசின் மீது கோவம் இல்லை என்பதுடன் மதப் பேரினாவாதத்தை வைத்து கலகம் செய்யலாம் என்பதையும் பொய்பித்தது.

அரசின் செயற்பாடுகள் இன்னும் சிறப்பாக செய்யவில்லை…. வாழ்க்கைச் செலவுகளைக் பெரிய அளவில் குறைக்கவில்லை… என்பதை பிரதானப்படுத்தி மக்களின் கவனத்தை இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை கலைய விடாமல் தடுத்திருக்கலாம்.

கூடவே நிதியிற்காக ரணிலால் தொடங்கப்பட்ட ஐஎம்எவ் சார்திருந்து ஆட்சி செய்பவர் என்பதாக கூட்டத்தில் பேசியது உண்மை என்றாலும் இவ் ஆட்சி ரணிலால் நிலையாக்கப்பட்ட அரசு என்றான வாதங்கள் ரணிலை சற்று நியாப்படுத்த முற்பட்டதே உண்மை.

இது நாமலின் கட்சியை வலுப்படுத்துவதற்கு பதிலாக இன்றைய கூட்டத்திற்கு ரணிலின் பிரசன்னம் இன்மையும் அண்மைய ரணிலின் கைதில் எந்த சலசலப்பு மக்கள் மத்தியல் ஏற்படாத நிலையில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட நாமலின் பேச்சு வலுவிழந்ததாகவே அமைந்திருந்தது.

ஏனைய எதிர்கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த கால ஆட்சிகளில் தமது தவறுகளால் தாம் நீதி மன்றத்தால் தண்டிக்கப்படுவோமோ…? ஆப்போது இதற்கு அரண் கேட்பது போல் நாமலை இளவரசனாக பாராட்டியது எமக்குள் உணர்வை ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில் தாம் கைது செய்யப்பட்டால் தமக்காக குரல் எழுப்புங்கள் மறாக ஹெகலய ரம்புக்கலை ஐ கைவிட்டது போல் விட்டுவிடாதீர்கள் என்றாக ராஜத செனிவரத்தின போன்றவர்கள் முன்வரிசைக் கதிரையில் அமர்ந்திருந்ததைப் பாரக்கும் போது பரிதாபமாக இருந்தது. இதனை தனது பேச்சின் மூலம் ஹரின் பெனான்டோ பேசியும் இருந்தார்.

மொத்தத்தில் ஆளும் அரசிற்கு எதிரான எதிர் கட்சிகளின் கூட்டம் மக்கள் திரள் இன்றி வலுவான கோசம் கோரிக்கை இன்றி எழுச்சிகள் இன்றி பரந்து பட்ட கட்சிகளின் ஆதரவு பிரசன்னம் இன்றி தோல்வியில் முடிந்துள்ளது.

பொறுப்புள்ள அரசியல் கட்சியாக எதிர் கட்சியாக ஒரு நாட்டின் ஆட்சியை நெறிப்படுத்தும் கூட்டமாக அமையாமல் தம்மை பாதுகாத்துக் கொள்ள முனைந்து அதிலும் தோற்ற கூட்டமாகவே இது முடிந்துள்ளது.

இறுதியாக இந்த கூட்டத்திற்கு முதல் தினமாக நேற்றை தினம் தமிழரசுக் கட்சியுடனான அனுராவின் சந்திப்பின் பின்னர் அதனை வைத்து அரசிலை செய்ய முடியாமல் தமிழரசுக் கட்சியையும் மௌனமாக்கிவிட்டது என்பதில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே மேலெழுந்து நிற்கின்றது.

ஒரு வலுவான நியாயமான கோரிக்கையான அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் மாணாக சபைத் தேர்தலை உடன் நடாத்துங்கள் அதற்கு தடையாக உள்ள எல்லை நிர்ணய சபை என்றான விடயத்தை உங்களிடம் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாவித்து இரத்துசெய்து முன் நகர்த்துங்கள்.

பின்பு கால அவகாசத்தில் புதிய அரசியல் யாப்பு அல்லது புதிய தேர்தல் முறை என்றாக நகர்த்துங்கள் என்பதை வலுவாக நியாயமாக ஒரே குரலில் தமிழர் தரப்பு பேசுவதற்குரிய முறையில் சந்திப்பை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டை மாகாண சபை தேர்தல் தாமதம் இன்றி நடாத்துவதற்குரிய அழுதங்களால் இணங்க வைத்திருக்கலாம் என்ற சந்தர்பத்தை மீண்டும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற சிந்தனை தடுத்துவிட்டதாகவே உணர முடிகின்றது
இதனை செய்ய முடியாதவர்கள் எப்படி எதிர்கட்சிகளின் போராட்டத்தில் இணைந்து போராடவும் முடியும்.

செய்தித் தாள்களில் செய்திகளே வராமல் இந்த சந்திப்பும் இந்த போராட்டத்திற்கு முதல் நாள் முடிவும் உற்றுள்ளது.

இவர்களுக்கு ஆதரவாகவும்…. இல்லை…. இல்லை… மாகாணசபைத் தேர்தலை உடன் நடாத்துங்கள் என்றான வலுவான கோரிக்கையை நாமல் இன் எதிர் கட்சிகளின் கூட்டம் ஒரு சொல்லுக் கூட இது பற்றிப் பேசாது எதிர்கட்சிகள் பரிதாபமாக மௌனம் ஆகிவிட்டனர் நவம்பர் 21, 2025 இற்கு பிறகு.