எல்லை தகர்க்கும் மனிதநேயம்!

 

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்.

ஆப்கானிஸ்தானுக்கு இலவசமாக பஸ் வாங்கி கொடுத்த இந்தியா,இலங்கைக்கு இலவச ரயில் வாங்கிக் கொடுத்த இந்தியா, நேபாளுக்கு நிதியுதவி செய்த இந்தியா,

சொந்த நாட்டு குடிமகனுக்கு
கொடுத்தது என்ன ?முதலில் ஊருக்கு ஊர் அமர ர் ஊர்தி வாங்கி தர கூட முடியவில்லை என்ற செய்தி அயல்நாட்டு பிரதமருக்கு தெரிந்து இருக்கு இந்திய நாட்டு மோடிமஸ்த்தானுக்கு தெரியவில்லை என்ன பன்றது எல்லாம் காலகொடுமை,வெளி நாட்டு பிரதமர்க்கு உள்ள மனசாட்சி கூட இந்தியாவின் அதிகாரவர்கத்துக்கு இல்லையே என்ன நாடுடா இது.

பிச்சகார நாடு மணிதமிருங்கள் வாழுகின்றநாடு ,மக்களை தங்களை ஆள நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக் தெரியாத நாடு.
பாண்டவர் வாழ்ந்த நாடு,இராமர் வாழ்ந்த நாடு,காந்திதேசம்,மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆண்ட நாடு,மனு நீதிச்சோழன் வாழ்ந்த நாடு என்றெல்லாம் பெருமையாகச் சொல்லும் இந்திய வல்லரசு நாடு இந்தவிடயத்தில்கோட்டைவிட்டுவிட்து.எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருந்தும் ஒருவருக்காவது இந்த ஏழைக்கு உதவி செய்ய மனம் வரவில்லை என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக இருக்கிறது.இந்த நிலையில் பஹ்ரைன்
நாட்டுப்பிரதமர் மனிதநேயம் மிக்க மனிதர் என்ற உன்னதமான பெயரைப் பெற்றிருக்கிறார் இந்திய
நாட்டில் மனிதநேயம் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் எத்தனையோ மனித நேயம் மிக்க நல்ல மனம் படைத்த மனிதர்கள் ஏராளம் உண்டு.வாழ்த்துக்கள் பஹ்ரைன் பிரதமர் அவர்களுக்கு.