எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி 21)

 (அ. வரதராஜா பெருமாள்)                    

இக்கட்டுரைத் தொடரின் இதுவரையான பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரம் எவ்வகைகளில் பரிதாபகரமான நிலைகளில் இருக்கிறது – எந்தளவுக்கு பாதகமான சூழல்களுக்குள் அகப்பட்டுப் போயிருக்கிறது என்பவை விபரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை எவ்வாறு இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் காலகட்டங்களில் மோசமாக்கப்பட்டு வந்திருக்கிறது – அந்த வகையில் இன்றைக்கும் இலங்கையை ஆளுபவர்களிடம் இலங்கையை நிமிர்த்தி முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைப்பதற்கான தொலைநோக்கோ திட்டங்களோ தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து செயற்படுவதற்கான எண்ணமோ இல்லையென்பதையும் எதிர்க்கட்சியினரும் அதில் சற்றும் குறைவிவல்லாதவர்களாகவே உள்ளனர் என்பதையும் இக்கட்டுரைத் தொடரில் மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் புள்ளிவிபரங்களுடன் ஆதாரப்படுத்தப்பட்டும் உள்ளன.