சம்பந்தனின் சிவதாண்டவமும் காலில் விழுந்துகிடக்கும் முயலகன் விக்கியும்.

சம்பந்தன் (அறம் மறத்தைவிட) மதிநுட்பம்மிக்க பக்கா அரசியல்வாதி.
புலிகள் காலத்தில் அரசியலில் நிலைக்க சமரசம் போனவர் புலியழிய யதார்த்தத்தையும் அறத்தையும் அறிந்து தனிநாட்டு கோரிக்கையை மிகச்சரியாக நிராகரித்தார். சம்பந்தரை குறைத்து மதிப்பிட்ட சங்கரி கொடுத்தவிலை சங்கரியின் அரசியல்வாழ்வு. சுமந்திரன் சம்பந்தர் பொறுக்கி எடுத்த துரும்புசீட்டு(Trump card). சம்பந்தர் போட்ட
wild card விக்கி. அது வேலை செய்யாமல் துரோகம் செய்தபோது பல மாதங்களுக்கு முன்னரே சுமந்திரன் ஆலோசனைப்படி விக்கியை கட்சியைவிட்டு கலைச்சு வேறொருவரை முதலமைச்சராக்கியிருக்கலாம். ஆனால் தீமையையும் நன்மையாக்குவதுதானே அரசியல் சாணக்கியம். விக்கியை விலக்குவதைவிட முயலகனை சிவன் உயிரோடு காலில் வைத்திருந்தமாதிரி வைப்பது பயன்.

இப்போது வடமாகாணசபை கூட்டமைப்பு உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலர் புலிகளின் சுடலையிலிருந்து வந்த பிணந்தின்ன காத்திருக்கும் கழுதைப்புலிகள். விக்கியை வைத்திருந்தால்
கழுதைப்புலிகளை பொதுசனம் அறிய வாய்ப்பிருப்பதோடு தங்களுக்குள்ளேயே கழுதைப்புலிகள் அடிபட்டு அடங்கவும் வாய்ப்பு. ஏற்கெனவே சம்பந்தர் ஆடிய non violent சிவதாண்டவத்தில் காணாமல்போயின  பொன்னம்பலம், பிரேமச்சந்திரன் முதலிய கழுதைப்புலிகள்.

ஸ்ராலின் புக்காரினை கொல்வதற்குமுதல் ஐரோப்பாவுக்கு போய்வர விட்டிருந்தார். அதுபோல விக்கி கனடாபோய்வர இப்போ விடப்பட்டிருக்கிறார். புக்காரின் ஐரோப்பாவில் இரகசியமாக உளறியதை விக்கி முயலகன் பகிரங்கமாக கனடாவில் உளறுகிறார்.
அரசியல் அறவழி சம்பந்தன் விக்கியை எப்போதோ கலைத்திருக்கவேண்டும். ஆனால் இப்பழியில் சம்பந்தரைவிட தமிழ் ஊடகங்களுக்கு அதிக பொறுப்புண்டு. வீரகேசரி, தினக்குரல், வலம்புரி முதலியவை விக்கியின் ஆட்சிப்பிழையை விமர்சிப்பதில்லை. உதயன் காலைக்கதிரின் அரசியலும் குடும்ப நன்மைசார்ந்துதான்.
(நட்சத்திரன் செவ்விந்தியன்.)