பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா யோகி ஆதித்யநாத்?

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில்…

உன்னாவ் மாவட்டத்தில்…
சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில்…

பிஜேபி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர்
அவரது சகோதரன் அதுல் சிங் இருவரும் –
பப்புசிங் என்பவரது 16 வயது மகளை
பாலியல் வன்முறை வல்லுறவுக்கு ஆளாக்கியதால்
அவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

பிஜேபி எம்.எல்.ஏ வை கைவிடுவாரா
யோகி ஆதித்யநாத்?

காவல்துறை வழக்கே பதிவு செய்யவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தந்தை பப்புசிங்கும்
தொடர்ந்து போராடியதால் காவல்துறை கைது செய்தது.

எம்.எல்.ஏ வையோ அவரது சகோதரனையோ அல்ல.
பெண்ணின் தந்தை பப்புசிங்கை .

காவல்நிலையத்தில் அவரை
எம்.எல்.ஏ செங்கரின் ஆட்கள் கொடூரமாகத் தாக்கியதால்
அவர் இறந்தே விட்டார்.

தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கும்
தன் தந்தையின் கொலைக்கும் நீதிகேட்டு
போராடிக் கொண்டிருக்கிறார் அந்தச் சிறுமி.

கோபால் ஸ்வரூப் சதுர்வேதி என்ற மூத்த வழக்கறிஞர்
உ.பி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்
இந்த வழக்கை நீதிமன்றமே ஏற்று விசாரிக்க வேண்டும்
என்று கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்ற உயர்நீதிமன்றம்
காவல்துறையை பலகேள்விகள் கேட்டது.

அதைத் தொடர்ந்து காவல்துறை
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து
அதுல்சிங்கை மட்டும் கைது செய்தது.

செங்கரை கைது செய்யக்கோரி போராடுகிறார் அந்தப்பெண்…
இடையில் தன் தந்தையின் மரணத்தை
நினைத்துக் கதறி அழுகிறார்.

எம்.எல்.ஏ செங்கர் மீது நடவடிக்கை எடுக்க
ஆதாரம் இல்லை என்று விசாரணை தொடங்காமலே
அறிவித்து விட்டார் யோகி ஆதித்யநாத்.

உன்னாவ் மாவட்ட நிர்வாகமோ
அந்தப் பெண்ணைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லி
ஒரு ஓட்டலில் தங்க வைத்து காவல் போட்டு
உணவு தண்ணீர் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியது.

யாரோடும் பேசவிடவில்லை.

என்னை ஏன் சிறை வைக்கிறீர்கள் என்று
அந்தப் பெண் தொடர்ந்து போராட…

இன்று அனைத்து செய்திகளும் வெளியாகிவிட்டன.

போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது உத்தரப்பிரதேசத்தில்….

பெண்களுக்கு எதிரான பிஜேபி ஆட்சிகள்
விரைந்தழிய வேண்டும்.

பதிவு /
அருள்மொழி (திராவிடர் கழகம்)
Annamalai Arulmozhi

நன்றி / சுடர் விழி