தற்கொலைகள்

ஊமைவிழிகள் படத்தில் ஒரு பாட்டு.வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மறக்கலாமா.வாழ்வு என்பது பலருக்கு சுலபமான விசயம் அல்ல.ஆனால் பெற்றவர்கள் ஏழைகளாக இருந்தாலும் இயலாதவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்பவர்கள்.முடிந்தளவு பிள்ளைகளின் எல்லா சுமைகளையும் சுமப்பவர்கள்.அவரகளின் ஆசைகள் கனவுகளை பிள்ளைகள் புரிவதில்லை.

வாழ்க்கையில் இறப்பு என்பது இயற்கையானது.ஆனால் பெற்றவர்கள் இருக்க பிள்ளைகள் இறப்பது என்பது ஜீரணிக்க முடியாத மரணவேதனை.நான் படிக்கும் காலத்தில் பரீட்சையில் தவறிய பலர் தற்கொலை செய்ததைப் அறிந்துள்ளேன்.காதலில் தோற்றவர்கள்,கடனில் மூழ்கியவரகள் தற்கொலையை தெரிவாக எடுத்துள்ளனர் .இவைகள் எல்லாம் பிரச்சினைக்கு தீர்வு அல்ல.

தமிழ் நாட்டில் ஒரு இளைஞன் காவிரி பிரச்சினையால் எழுந்த கர்நாடக வன்முறைக்கு பதிலடியாக தீக்குளித்து இறந்துவிட்டான்.தி.மு.க உருவாக்கிய அநாகரீக கலாச்சாரம்.தாளமுத்து,சின்னசாமி என தொடங்கி பல தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள்,நடிகர் சங்கங்கள் என நோயாக பரவிவிட்டது .இதுவரைக்கும் ஒரு போலியான கண்துடைப்பு கண்டனங்களே வந்துள்ளன.

பகுத்தறிவு என்று பேசி அரசியலை வளர்த்த தி.மு.க இதை தடுக்க முன்வரவில்லை. அதில் குளிர் காய்ந்தது.இன்று மற்ற கட்சிகளுக்கும் பரவி விட்டது.அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் குளிர் காய்குன்றனர்.ஊடகங்களும் இவற்றை வைத்து வியாபாரம் பண்ணுகின்றன.இறந்த இறக்கின்ற மனிதர்களின் குடும்ப நிலைமை என்னாகிறது என்று யாரும் யோசிப்பதில்லை .நிவாரண நிதிகள் இழந்த உயிரை திரும்பத்திரும்ப தரப்போவதில்லை.சந்தோசத்தையும் தரப்போவதில்லை.

எனக்குத் தெரிய ஒரு தற்கொலை மற்ற உயிர்களைக் காப்பாற்ற நடந்தது. விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் கைக்குண்டு கொண்டு சென்று தவறுதலாக வீழ்ந்தபோது கிளிப் கழன்றுவிட்டது.அந்த இடத்தில் பொது மக்கள் நின்றதால் உயிரிழப்பை தடுக்க அமலதாஸ், ஒரு புலி உறுப்பினர் அந்த குண்டின் மீது வீழ்ந்து படுத்து தன்னை அழித்தார்.இது யாழ் கரை ஊர் பகுதியில் நடந்தது.

வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் வரலாம்.அதற்கு தற்கொலை தீர்வைத் தராது.வாழக்கையைத் தக்கவைக்க எல்லோரும் போராடித்தான் தரவேண்டும்.பிள்ளைகள் இறப்பதை எந்தப் பெற்றோராலும் தாங்கமுடியாது.

(விஜய பாஸ்கரன்)