பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 23 )

நாங்கள் அண்ணனுடன் வந்தபின் நாளாந்தம் சமையலுக்குப் பொருட்கள் வாங்கப் போவோம்.பற்குணமும் நானும் போவோம்.அன்றைய ஆரம்ப நாட்களில் பல பொதுமக்கள் பற்குணத்தை அடையாளம் தெரியாது.அதனால் வெள்ளை சாரம் அணிந்து என்னுடன் வருவார்.காலையில் கடற்கரைக்கு மீன் வாங்கப்போவோம்.அவரகள் பிடித்த மீன்களின் அளவுக்கேற்ப நாங்கள் கொடுக்கும் காசுகளுக்கு மீன் கொடுப்பார்கள்.அதன் மூலம் அவர்கள் வருமானம்,சந்தோசம் துக்கம் எல்லாம் கொடுக்கும் மீனின் அளவைக் கொண்டே பற்குணம் கணித்தார் .அவரகளிடம் பேரம் பேசாமல் வாங்கிவருவோம்.

பின் நாட்களில் எங்களை அடையாளம் கண்டு கொண்டனர்.அதன் பின் எங்களிடம் இலாபமோ நட்டமோ பணம் வாங்க மறுத்தனர்.இதனால் வேறு ஆட்களை வைத்தே மீன்களையும் பொருட்களையும் வாங்கவேண்டியதாயிற்று.சிலர் வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்க முற்பட்டனர்.அவற்றைப் பணம் கொடுத்தே வாங்கி எச்சரித்து அனுப்பினார்.எங்களையும் எதையும் யாரிடமும் வாங்கவேண்டாம் என எச்சரித்தார்.

பற்குணத்தை தேடி அலுவலகத்துக்கு மட்டும் அல்ல எங்கள் வீட்டுக்கும் வந்து பொதுமக்கள் கதைக்கத் தொடங்கினர் .இதன் காரணமாக பொது மக்களுக்கும் பற்குணத்துக்கும் இடையே தொடர்புகள் நன்றாக வளர்ந்தன.
சிலர் பற்குணம் இல்லாத நேரங்களில் வந்தால் அம்மாவுடன் கதைப்பார்கள்.அம்மா கேட்பார்.ஆனால் எதுவும் பதில் சொல்வதில்லை.அண்ணன் அலுவலக விசயங்கள் தவிர்ந்த குடும்ப விபரங்கள் மட்டும் கதைப்பார்.

இந்தத் தொடர்புகள் காரணமாக டி.ஆர.ஓ என்கிற பயம் பொது மக்களிடம் போனது.அதன் காரணமாக அலுவலகத்தில் அவர்களுக்கான வேலைகளும் சுலபமாக முடிக்கப்பட்டது .காரணம் பொதுமக்களுடனான நேரடித் தொடர்புகளை.அவரகளால் பற்குணத்தை அணுகமுடியம் என்பதால் சக ஊழியர்கள் கடமைகளை உடன் நிறைவேற்றினர்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)