பற்குணம் A.F.C (பகுதி 75 )

1977 இல் ஜே.ஆர் ஆட்சிக்கு வந்தபின் முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.சர்வ அதிகாரம் படைத்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உள்ளூராட்சி அமைச்சின் விதிமுறைகளுக்குப் புறம்பாக நீதிபதியாக இருந்த ஞானச்சந்திரன் என்பவரை முல்லைத்தீவு அரசாங்க அதிபராக நியமித்தார்.ஞானச்சந்திரன் முன்னைய ஆட்சியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தயவில் நீதிபதி நியமனம் பெற்றவர்.பின்னர் ஐ.தே.க ஆதரவாளராக மாறி இப்போது அரசாங்க அதிபராக நியமனம் பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் யோகேந்திரா துரைசுவாமி,்தேவநேசன் நேசையா போன்றவர்களுக்கு காட்டிய எதிர்ப்பை த.வி.கூட்டணி ஞானச்சந்திரனுக்கு காட்டவில்லை .ஞானச்சந்திரன் நியமனம் தொடர்பாக இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.ஆனால் ஜே.ஆர். கண்டுகொள்ளவில்லை .நாட்டை சீரழித்த தலைவர் அவர்.

முல்லைத்தீவில் பற்குணத்தின் நண்பரான நடேசபிள்ளை உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார் .ஒரு நடேசபிள்ளை பற்குணத்தை சந்தித்தார். அப்போது புதிய மாவட்ட நிர்வாகம் தொடர்பாக நடேசபிள்ளை அவர்களிடம் கேட்டார்.நடேசபிள்ளை மிகவும் விரக்தியுடன் பதிலளித்தார்.அப்போது பற்குணம் விபரத்தை துருவிக் கேட்டார்.அவர் விபரத்தை கூறினார்.

துணுக்காய் மல்லாவியில் உள்ள கடை ஒன்றுக்கு விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையிட சென்றபோது கடை உரிமையாளர்களால் தாக்கப்பட்டனர்.இதை அவர்கள் நடேசபிள்ளை அவர்களிடம் முறையிட அவரும் கூடவே போயிருக்கிறார்.அவரையும் தாக்கினர்.இது தொடர்பாக நடேசபிள்ளை அரச அதிபர் ஞானச்சந்திரன்,மற்றும் பொலிஸில் முறையிட்டார்.
ஆனால் ஞானச்சந்திரன் அந்த வியாபாரியின் பக்கம்நின்று அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் தடுத்தார்.இதனால் நடேசபிள்ளை வேதனையும் சலிப்பும் அடைந்தார்.மேலும் நிர்வாக திறனற்ற ஞானச்சந்திரனுடன் வேலை செய்யுமுடியவில்லை என்றார்.

ஒரு அரச அதிகாரியின் நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டிய அரச அதிபர் இவ்வாறு நடந்துகொண்டது பற்குணத்துக்கு பிடிக்கவில்லை .மேலும் கடமைக்கு இடையூறு கொடுத்த வியாபாரிக்கு பாடம் படிப்பிக்க விரும்பினார்

இதைக் கேட்ட பற்குணம் நீ மன்னாருக்கு இடமாற்றம் கேள்.நான் இடமாற்றம் கேட்டால் தரமாட்டார்கள். எனவே நீ கேள். நீ மன்னாருக்கு வா.நான் அங்கே போகிறேன் என்றார்.

அதன்படி இருவரும் ஒத்து இடம்மாறிக் கொண்டனர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)