பிரபாகரனை வா , வந்து எங்களுக்காக போராடு என்று எந்த தமிழரும் வெத்திலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை…

1970 களில் வடமராட்சி பிரதேசம் கடல்க் கள்ள கடத்தலில் கொடிகட்டி பறந்த காரணத்தினால் அப்பகுதியில் இலங்கை இராணுவம், போலீசின் கெடு பிடிகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் சினமடைந்த கள்ள கடத்தல் குழுக்கள் துப்பாக்கி கொண்டு இலங்கை போலீசை எதிர்க்க ஆரம்பித்தனர், இதற்க்கு அனைத்து தமிழர் தரப்பையும் கவரக்கூடிய ஒரு எதிர்ப்பு சுலோகம் தேவைப்பட்டது. அந்த எதிர்ப்பு சுலோகம் தான் “ஈழம்” அதே கள்ள கடத்தல் கும்பல்களில் இருந்து வந்தவர் தான் பிரபாகரன் பின்னர் ஏனைய கள்ள கடத்தல் குழுக்கள் , யாழ்ப்பாணத்தில் படித்த தலைவர்கள் , அரசியல் தலைவர்கள் என அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, தனக்கு தானே “மேதகு ” என பட்டம் சூட்டினார்.