இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக அதிமான தமிழர்கள் இறந்தது உண்மையானதுதான். இலங்கையில் மூன்று இனக் கலவரங்களும் ஒரு மத கலவரங்களும் நடந்துள்ளன.இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை இனங்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இந்த கலவரங்கள் காரணமாக உள்நாட்டு யுத்தங்கள் முப்பது ஆண்டுகளாக நடந்தது . இங்கே சகோதரப் படுகொலைகளும் சக இனத்தவர்களை படுகொலை செய்த சம்பவங்களை யாரும் பேசுவதில்லை.
1984 கென் பாம் டொலர் பாம் பகுதிகளில் குடியிருந்த அப்பாவி சிங்கள மக்களை வெட்டிக் கொன்றார்கள்.
1985 இல் அனுராதபுரம் நகரில் நுழைந்து முத்நூறுக்கும் அதிகமான அப்பாவி சிங்கள மக்களை கொன்று குவித்தார்கள்.
1986 இல் ஓரிரு நாட்களில் முன்னூறுக்கும் அதிகமான தமிழர்களை புலிகள் கொன்றார்கள். இதில் பலரை உயிரோடு தீயிலே போட்டுக் கொழுத்தினார்கள்.
இதேபோல அவர்களால் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவம் இந்திய இராணுவத்தினரையும் புலிகள் உயிரோடு கொழுத்திய சம்பவங்கள் நடந்தன.
யாழ் நகரில் கந்தன் கருணை என்ற வீட்டில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமாக சக போராளி அமைப்பினரை வீட்டுக்குள் பூட்டு குண்டு வைத்துக் கொலை செய்தார்கள்.
1989 இல் இலங்கை இராணுவத்தோடு இணைந்து நூற்றுக்கும் அதிகமான புளொட் அமைப்பினரை படுகொலை செய்தார்கள்.
1990 இல் வடக்கே வாழ்ந்த முஸ்லிம் மக்களின் சொத்துக்களை சூறையாடி இரவோடு இரவாக விரட்டியடித்து இன சுத்திகரிப்பைச் செய்தார்கள்.
காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் தொழுகைக்காக வந்த அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். இதில் ஏதுமறியாத அறுபது அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்.
மட்டகளப்பு வாகரை ஆற்றங்கரையில் நானூறுக்கும் அதிகமான சொந்தப் போராளிகளை சுட்டுக்கொன்று பெண்களை கற்பழித்து ஆற்றிலே வீசினார்கள்.
இவை எல்லாம் படுகொலைகள் இல்லையா?
பஸ் ரயில் கோவில் விகாரை என பொதுமக்கள் வாழிடங்கள் எங்கும் குண்டுத் தாக்குதல் நடாத்திக் கொன்றது யார்.
இந்தப் படுகொலைகள் இலங்கை வாழ் தமிழர்கள் அறியாத விபரங்களா?
கனடாவில் அரசியலில் நிற்கும் ஹரி ஆனந்தசங்கரி விஜய் தணிகாசலம் லோகன் கணபதி யுவனிதா நாதன் என்பவர்களுக்கு தெரியாத விசயங்களா?
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என எந்த வரையறையை வைத்து பிறம்ரன் மேயர் பற்றிக் பிறவுண் பேசினார். அது அவரது தவறு அல்ல. உண்மைகளை மூடி மறைத்து தவறான தகவல்களை தமிழர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் இத்தனை உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? புலிகள் இலட்சக் கணக்கான மக்களை பணயக் கைத்திகளாக வைத்திருந்து யுத்தத்தை நடத்தினால் படைகள் கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பார்களா?
இந்த யுத்த காலங்களில் பலாத்காரமாக குழந்தைகளுக்கு ஆயுதம் கொடுத்த சண்டைக்கு அனுப்பிய உண்மைகளை ஏன் சொல்லவில்லை.
பெற்றவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி குழந்தைகளை கடத்தியது இந்த ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாதா?
இங்கே நடந்த அதிமான உயிரிழப்புகளுக்கு தமிழர்களே அதாவது புலிகளும் புலி ஆதரவாளர்களுமே பொறுப்பு. இது எந்த வகையிலும் இன அழிப்பு அல்ல.
அங்கிருந்து தப்பி வந்த மக்கள்மீதே தற்கொலைத் தாக்குதல் நடாத்திக் கொன்றார்கள்.
இலட்சக் கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து இலங்கை அரசும் இராணுவமும் மீட்டது .
இராணுவத்திடம் தப்பி ஓடி வந்த இலட்சக் கணக்கான மக்கள்மேல் புலிகளே தாக்குதல் நடாத்திக் கொல்ல முயன்றார்கள்.
அவர்களை இராணுவமே காப்பாற்றியது.
இதற்கான ஆவணங்கள் இன்னமும் அழியவில்லை. அழிக்கப்படவும் இல்லை.
முள்ளி வாய்க்காலில் நடந்தது இனப் படுகொலை அல்ல. அது அப்பாவி மக்களை மீட்க நடந்த யுத்தம். ஒரு பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட்ட வரலாறு அது.
பற்றிக் பிறவுண் தவறான தகவல்களை வைத்து பேசியுள்ளார். அவருக்குத் தவறான தகவல்களை கொடுத்து அவர்களையும் இலங்கை மக்களையும் கனடா வாழ் தமிழ் அரசியல்வாதிகள் முட்டாள்களாக்க முயலுகிறார்கள்.
அநீதியைக் கண்டு பொறுமையாக இருக்கக்கூடாதை என பொங்கி எழுகிறார் யுவனிதா நாதன். உண்மைதான் ஆனால் அவரால் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காக வாய் திறக்க முடியுமா?
இதுவரைக்கும் ஒரு கண்டனம் இல்லை. ஆனால் இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று எந்த வரையறையில் கூறுகிறார்.
அவர் சொன்னது சரியென்றால் நான் மேலே தந்த தரவுகளுக்கும் பதில் சொல்லவேண்டும்.
இந்த நினைவுச் சின்னம் கனடிய தமிழ் அரசியல்வாதிகளின் பொய்ச் சாட்சியாக நிற்கிறது.
ஒரு அராஜக கும்பலிற்கு துணையாக நிற்கிறது.
உண்மைகளை மூடி மறைக்கும் சின்னம். கனடாவுக்கே
அவமானம் தரும் சின்னம்.
இந்த நினைவு சின்னம் தொடர்பாக இலங்கை அரசோ இலங்கைக்கான கனடிய தூதரகமோ எந்த விதமான எதிர்வினைகளை காட்டவில்லை என்பதும் கவலைக்குரிய விசயம்.