மத்திய தரைக்கடல் பகுதியில் பாரிய யுத்தம் ஏற்படும் அபாயம்.

இந்தப் போரில் ரஷ்யப் படைகளும், எகிப்திய படைகளும் ஐக்கிய அரபு இராச்சிய படைகளும், இஸ்ரேலிய இராணுவ பயிற்றுவிப்பாளர்களும் களத்தில் போராடுகின்றனர். இதற்கப்பால் பிரான்ஸ் பகிரங்கமாகவே இந்த கூலிப்படையை ஆதரிக்கிறது. எகிப்து ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு திரிப்போலியில் ஆட்சி நடத்துவதாக கூறி் இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தினாலும் . இதனுள் இருக்கும் அரசியல் மிகவும் சிக்கலானது.

மத்திய தரைக்கடலில் மொத்தமாக 122 ட்ரில்லியன் பரல்கள் மசகெண்ணெய்(கச்சா எண்ணெய்) இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த எண்ணையை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் எகிப்து, , கிரேக்கம் ,சைப்ரஸ் , இஸ்ராயி்ல் ஆகிய நாடுகள் பாரிய ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது
.
துருக்கி லிபிய அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் ஊடாக ஐரோப்பாவுக்கும் வெளி உலகுக்குமான கடல் பாதையை தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் இது ஏனைய நாடுகளின் உரிமையை மீறும் என குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை துருக்கியின் பாராளுமன்றத்தின் வெளிவிவகார கொள்கைகளுக்கான குழு துருக்கி ராணுவம் நேரடியாக லிபியாவில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சற்றுமுன் அங்கீகரித்துள்ளது. அனேகமாக புதன்கிழமை துருக்கிய பாராளுமன்றம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலை ஏற்படுமாயின் பாரிய பிராந்திய மோதல் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

துருக்கி அரசின் இந்த செயலால் கூடுதலாக பாதிக்கப்படப்போவது இஸ்ராயில் ஆகும். ஏனெனில் இஸ்ரேலிய அரசு எகிப்தின் உதவியுடன் மத்தியதரைக் கடலில் உள்ள எண்ணை வளத்தை பயன்படுத்துவதற்கும். கடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் பெருமளவு முதலீடு செய்துள்ளது. இது எல்லா திட்டங்களையும் தவிடுபொடி ஆக்குவதாக துருக்கியின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது. எனவே இஸ்ரேல் எந்த விலை கொடுத்தாவது துருக்கியின் இந்த நகர்வை தடுத்முயற்சிக்கும்.

துருக்கி நேரடியாக ராணுவத்தை லிபியாவுக்கு அனுப்பும் போதும் பாரிய பிராந்திய மோதல் வெடிக்கும். இதனால் உலக சந்தையில் பெருமளவுக்கு எண்ணெயின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிரான்ஸ் துருக்கியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் பாரிய அதிருப்தியுடன் உள்ளது. பிரான்சின் ஜனாதிபதி மூளை இல்லாதவர் என எர்தோகன் அன்மையில் பகிரங்கமாக கூறியமை பிரான்சிய அரசை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பிரான்ஸ் சிலநேரம் நேரடியாக யுத்தத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

துருக்கிய படைப்பிரிவுகளும், கப்பல்களும் லிபியாவை வந்தடைந்துள்ளது பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இவை உண்மை எனின் எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் என்பன துருக்கியுடன் மோதுவதற்கான நிறைய வாய்ப்பு உள்ளது.
எகிப்திய அரசு சைப்ரசின் கிரேக்கப் பகுதியுடன் ஒப்பந்தம் செய்து தனது ராணுவத்தை அங்கே அனுப்புவதற்கு திட்டமிடுகிறது. மிகவும் சிக்கலான இந்த நிலைமை ஒரு பாரிய போராட்டத்தை ஏற்படுத்தும் ஆயின், வளர்முக நாடுகளின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கும் என எஎதிர்பார்க்லாம் .