இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல முற்பட்ட பாலகுமார் உட்பட பலரும் இவ்வாறுதான் கொல்லப்பட்டார்கள்.
இது ஒரு மிருகம் மக்களை கேடயமாக கைது செய்து தம்மை காப்பாற்ற கொண்டு சென்று இன்னொரு அரசு மிருகம் கொல்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டதன் உச்ச பலிகொடுப்பு நிகழ்வு ஆகும்.
இன்று தேர்தலில் பிரதான நீரோட்டத்தில் நிற்கும் அனைத்து “தேசியம்” பேசும் தமிழ் கட்சிகளும் மனிதக் கேடயங்களை விடிவியுங்கள் என்றாக குரல் கொடுக்கவில்லை.
மாறாக உள்ளுக்கை வரவிட்டு அடிப்பார்கள் என்று உசுப்பேத்தியவர்கள்
அமெரிக்காவின் கப்பல் வந்து காப்பாற்றும் என்று நம்பிக்வர்கள் நம்பிக்கை ஊட்டியவர்கள் அமெரிக்காவை நம்பிய அளவிற்கு தம்மை தமது மக்களை நம்பவில்லை.
இறுதியில் வெள்ளைக் கொடியுடன் இலங்கை ஆமியை நம்பி முன்னரங்கிற்கு சென்று கொல்லப்பட்வர்கள்.
எதிரியிடம் என்றுமே உயிருடன் பிடிபடுவதில்லை என்ற கொள்கை குன்றுகளாக செயற்பட்டவர்கள் பத்தாயிரத்திற்கு மேல் சரணடைந்து சிலர் கொல்லப்பட பல விடுதலை செயயப்பட்டதே வரலாறு.
இதில் அந்த சிலர்தான் காணமல் ஆக்கப்பட்டவர்களோ…?
அன்று இறுதி நாட்களில் செல் அடிபட்டு செத்த மாட்டை இறைச்சியாக்கி கூடுதல் விலைக்கு விற்று இறுதிக் கட்டத்தில் புழைப்பு நடாத்திய அநியாயங்களும் அன்று நடைபெற்றன.
பல பொது மக்கள் கூட்டமாக தாம் இருந்து கொண்டு எது வந்தாலும் பரவாய் இல்லை எதிர்போம் வெளியேறுவோம் என்று தம்மளவில் வைத்திருந்த அரசியல் கஞ்சியாக்கி பகிர்ந்துண்ட தை இன்று முள்ளிவாய்கால் கஞ்சியாக்கி கேவலப்படுத்தவும் செய்கின்றனர்.
இதனை வைத்து வாக்கு அரசியலையும் பிரிந்து நின்றுதான் இன்றும் செய்கின்றனர்
மே 18 2009 பிறகு சர்வதேசத்திடம் இன அழிப்பு என்றாகவும் குற்றங்கள் என்றாகவும் கோரிக்கை வைத்து ஐநா பிரித்தானியா அமெரிக்கா கனடா என்று எமது பிரச்சனைகள கொண்டு செய்று எமக்கான தீர்விற்கு கையேந்தும் அரசியல் சூனியங்கள் இவர்கள்.
நீங்கள் கையேந்தும் இவர்கள்தான் இந்த யுத்தத்தை நடாத்தியவர்கள். ஒரு காலத்தில் எம்மை காலனி ஆதிகத்திற்குள் உள்ளாக்கி பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் செய்தவரகள்
இதற்கும் மேலாக அவர்கள் நாட்டின் முதல் குடிகளை அழித்துதான் இவர்கள் தமது நாடுகளை அமைத்தவர்கள்.
தமது நாட்டிற்குள் முதல் குடியினர் 1980 களின் பிற் பகுதியல் நடாத்திய போராடத்தை நசுக்கியவர்கள்.
இவர்கள் தமது மாநில முதல்வர் பதவி கிடைக்காதினால் மாநகர முதல்வராகி அப் பதவியை தக்க வைக்க இனவழிப்பு என்றாக சிலை அரசியல் செய்பவர்கள்.
இதனை ஏற்காதவர்களை கொழும்பிற்கு போகுங்கள் என்று கூறுபவர்கள்.
இவர்களை நம்பியா எமக்கான நீதியை, அரசியல் தீர்வை கேட்டு நிற்கின்றீர்கள்.
இவர்களுடன் கரம் கோர்த்து சிலர் கனடிய அரசில் பட்டம் பதவி பட்டயம் பெற்று தமது வாழ்வை செப்பனாக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இவர்களுக்கு இனம் மொழி தேசம் எல்லாம் தமது சுய இலாபம் தம் குடும்ப வாழ்விற்கு அப்பாலும் இல்லை இப்பாலும் இல்லை.
கனடா போன்ற நாடுகள் தமது மண்ணில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த நாடுகள். இவ்வாறான நாட்டின் அரசியல்வாதிகளிடம் எமது அரசியல் விடுதலையை தேடி நிற்கின்றோம் என்பது எமது சமூகத்தின் அவலம்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் விடுதலை இலங்கை மண்ணில் வாழ்கின்ற ஏனைய தேசிய இனங்களுடன் சேர்த்து போராடி பெறப்பட வேண்டிய தொன்று.
எமது போராட்டம் முழுவதும் சர்வதேச சமூகத்தின் தார்மீக ஆதரவை திரட்டுவதை பதிலாக சாகடிக்கப்பட்ட இராணுவத்தின் எண்ணிகையை வைத்து உண்டியல் குலுக்கும் கைங்கரியங்களை பெருமிதம் கொண்டதே அதிகம்.
மாற்றுக் கருத்தாளர்களை நசுக்கியது சக சிறுபான்மை பெரும்பான்மை அப்பாவி மக்களையும் கொன்றொழித்ததை பெருமை பேசியதால் சரவதேச சமூகத்தின் ஆதரவை பெறமுடியாதவர்கள்.
இன்று முள்ளிவாய்கால் வாரம் கஞ்சி நினைவுத் தூபி என்றாக புறபட்டு எதனையும் சாதிக்து பெறப் போவது இல்லை. வேணும் என்றால் உங்களுக்கான வாக்கு சரிவடையாமல் பார்த்துக் கொள்ளலாம்…?
உங்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவுச்சின்னங்களும் அழிந்த மக்கள் பற்றியதோ, எதிர்காலம் நாசமாகிப் போன எங்கள் இனம் பற்றியதோ இல்லை. முழுக்க முழுக்க உங்களைப் பற்றியதே.
தீர்வுகளை அதிகாரப் பரவலாக்கத்தை நாம் உள்ளுக்குள்ளே தான் போராடி பேச்சுவார்தை நடாத்தி தந்திரோபாயங்கள் மூலம் கடந்த காலத்தில் தவறவிட்டது போல் அல்லாது பெற்றாக வேண்டும்.
இது மிகவும் கடினமான பாதைதான்.
அதுதான் இன்று அநியாயமாக இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி அவர்களின் இழப்புக்களுக்கு நாமும் இணைந்து அஞ்சலி செலுத்துகின்றோம். இந்த இறந்த சில துப்பாக்கிகளும் எமக்கு எதிராக தூக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கும் எமது அஞ்சலிகள்.