வெருகல் படுகொலை

இன்று வெருகல் படுகொலை நினைவு நாள். கடந்த மாதம் 30ந் திகதி நாம் கந்தன் கருணைப் படுகொலை நினைவு நாளை நினைவு கொண்டு கடந்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பெயரில் விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட கூட்டுப் படுகொலைகளை கணக்கெடுக்க வேண்டிய காலம் இது. இந்தப் படுகொலைகளில்கொ ல்லப்பட்டவர்களது பெயர் விபரங்களை முழுவதுமாகத் திரட்டியே ஆக வேண்டும். இந்தச் சம்பவங்களில் பங்கு பற்றியவர்கள் மற்றும் சம்பவங்களிலிருந்து தப்பியவர்கள் என்று தற்போது எஞ்சியிருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்களிடமிருந்து கேட்டறிவதற்கும் அவற்றைத் தகுந்த முறையில் பதிவு செய்வதற்கும் இருக்கின்ற நாட்கள் மிக மிகக் குறைவே.

தனியே சிங்கள அரசால் மேற் கொள்ளப்பட்ட வெலிக்கடைப் படுகொலையும் அதன் பின் நடைபெற்ற சிங்கள தமிழ்க் கலவரமும் மட்டும் கறுப்பு யூலை அல்ல நமக்கு. புலிகளால் செய்யப்பட்டகாத்தான்குடிப் படுகொலை நாளும் கந்தன் கருணைப் படுகொலை நாளும் வெருகல் படுகொலை நாளும் ரெலோ இயக்கம் அழிபட்ட நாளும் கென்பார்ம் டொலர்பாம் கொலை நாளும் கணக்கற்ற 7 TELA போராளிகளை புளொட் இயக்கம் அழித்த நாள் என்று கறுப்பு மாதங்கள் மிக அதிகமாகவே நமக்கு இருக்கிறது. இவை எல்லாம் கணக்கெடுக்க வேண்டிய காலம் இது. அதில்லாமல் வெறுமனே யூலைப் படுகொலை என்று மட்டும் வருடத்தில் ஒரு முறை தமிழர்களது படுகொலைகள் குறித்து கரிசனை கொள்வதாகச் சொல்பவர்கள் வெறும் பித்தலாட்டக்காரர்கள். பொய்யர்கள்.
– Katsura
2004ம் ஆண்டு இந்த வெருகல் படுகொலை நடந்தபோது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது..அதுமட்டுமா நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்புகுழு கடமையிலிருந்ததே அப்படியிருக்க எப்படி இந்த படுகொலை சாத்தியமாகும்.வன்னியிலிருந்து ஒமந்தையூடாகவும் கடல் வழியாகவும் எப்படி வன்னிபுலிகள் இந்த வாகரை பிரதேசம்வரை ஆயுதங்கள் சகிதம் வந்து சேர்ந்தனர்? இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? அன்றைய அரசுடன் வன்னிபுலிகளுக்காக தூது சென்ற தமிழ் தேசிய தலைவர்கள் யார்? இந்த உண்மைகள் அம்பலமாக்கபடவேண்டும்.எமது மக்களுக்கு நீதி வழங்க படவேண்டும்.