ரா உளவாளியாக நியமிக்கபட்ட மாத்தையா கிட்டு கப்பலை காட்டிக் கொடுத்தார் பிரபல பத்திரிகையாளர் புத்தகத்தில் தகவல்

பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால். 1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன்னர் நீனா கோபால்தான் கடைசியாக அவரை பேட்டி எடுத்திருந்தார். தற்போது “The Assassination of Rajiv Gandhi” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை நீனா கோபால் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜா குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

1989ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா’வின் உளவாளியாக மாத்தையா நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் பெரும்பான்மையானோர் நம்பிக்கையைப் பெற்று பின்னர் தலைவராக இருந்த பிரபாகரனை அழித்துவிட்டு தலைமைப் பொறுப்பை ஏற்பது என்பதுதான் மாத்தையாவுக்கு கொடுக்கப்பட்ட ‘அசைன்மெண்ட்’.

1993-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு வெளிநாடு ஒன்றில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கப்பல் குறித்த தகவலை ‘ரா’வுக்கு கொடுத்ததும் மாத்தையாதான். அந்த கப்பல் சென்னை அருகே சுற்றி வளைக்கப்பட கப்பலை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் கிட்டு.

கிட்டுவின் கப்பல் வரும் தகவலை மாத்தையாதான் இந்தியாவுக்கு காட்டி கொடுத்தார் என சந்தேகித்து விடுதலைப் புலிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் 1994-ம் ஆண்டு டிசம்பரில் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்தனர் விடுதலைப் புலிகள். அவரது ஆதரவாளர்கள் 257 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இலங்கையில் இந்திய ராணுவம் முகாமிட்டிருந்த போது, விடுதலைப் புலி்களுக்குள் ‘ரா’ அமைப்பு ஊடுருவியது. பிரபாகரன் மனதில் என்ன ஓடுகிறது என்ற சமிக்ஞைகளை நாம் சரியாக உணர்ந்திருந்தால் ராஜீவ்காந்தியை நாம் இழந்திருக்கமாட்டோம் என ரா அதிகாரி ஒருவர் கூறினார்.

ராஜீவ்காந்தி அளித்த கடைசி பேட்டியில், தெற்காசியாவின் எந்த ஒரு தலைவரும் சக்திமிக்கவராக உருவானால் அவர் கொல்லப்படுவது தொடருகிறது. இந்திரா காந்தி, ஷேக் முஜிப், பூட்டோ, ஜியா உல் ஹக், எஸ்.ஆர்.டபிள்யூ.டி. பண்டாரநாயக்க என இந்த வரிசை தொடர்கிறது. நானும் சில கருப்பு சக்திகளின் இலக்காக இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு நீனா கோபால் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இது ஒன்றும் புதினமான செய்தி அல்ல. இதனை எம்மைப் போன்றவர்கள் 1985 களிலேயே கூறி வந்தோம். பிரபாகரின் பிரச்சனை மாத்தையா விடயத்தில் தன்னைவிட செல்வாக்கில் அதிகமாகி வந்ததும் இதன் தொடர்ச்சியாக தனது இடத்தை பிடித்துவிடுவார் என்றதுமே இதேமாதிரியான பிரச்சனைகளே கிட்டுவிற்கும் மாத்தையாவிற்கும் இருந்தது. இதன் ஒருவடிவம் கருணா பிரபாகரன் விடயத்திலும் இருந்தது. கருணா கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதினால் யாழ்ப்ணிகள் அதிகம் பிரபாகரனைவிட்டுவிட்டு விலகமாட்டார்கள் என்பவும் இங்குகவனிக்க தக்கது. அதுசரி இன்றுவரை தமிழ்நாட்டில் இருக்கும் காசியானந்தன் மட்டும் ராவின் உளவாளியாக இராமல் எப்படியாம் இருப்பார். கூடவே 1984களில் இருந்து புலிகளுக்கு நெருக்கமாக இருக்கும் சப்ரா சரவணபவன் உதயன் பேப்பர் எல்லாம் வளசரவாக்கத்தில் வீடுகளும் வியாபாரங்களும் வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுச்சிறையிலிருந்து புலிகளை தப்ப வைத்ததற்கு பின்னால் ராவும் சரவணபவனுக்கும் சரவணபவன் கூடாக வித்தியாதரன் புலிகளுக்கும் இடையில் உறவுகளும் உளவுகளும் இருந்தது உண்மையே. இங்கு புலிகள் பலரும் ராவின் உளவாளிகள்தான். என்ன ரா ஏனைய அமைப்பினரையும் தமது உளவாளிகளாக வைத்திருந்தது மட்டும் புலிகளுக்கு பிடிக்கவில்லை. நியாயப்படி பார்த்தார் மாத்தையாவை கொன்ற அதே கரங்கள் அதே காரணங்களுக்காக தம்மைத் தாமேயும் சுட்டுக் கொன்றிருக்கவேண்டும் இது நடக்குமா…?

(சாகரன்)(செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. நன்றி தேனி)