அதனை இந்தியாவின் தற்போதைய அரசு முஸ்லீம் பயங்கரவாதமாக மட்டுப்படுத்தி தனது நாட்டிற்குள் வசிக்கும் இஸ்லாமியருக்கு எதிரான மன நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் அண்மைய காலத்தில் செய்து வருகின்றது.
மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை மேற்குலகம் சிறப்பாக அமெரிக்கா பாகிஸ்தானை மையப்படுத்தியே ஊக்கிவித்து வந்தது.
இன்று அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட பெரும்பாலும் எல்லா இந்த தீவிரவாத அமைப்புக்களும் அமெரிக்கால் பாலூட்டப்பட்டு பாகிஸ்தானில்தான் உருவானவை.
இது முஹாஜிதீன் இல் இருந்து அல்கொய்தா வரை இதுதான் நிலமை.
அமெரிக்கா இவர்களைப் பாவித்து தாம் விரும்பும் நாடுகளில் குழப்பங்களை விளைவிக்க அவர்களுக்கான தளங்கள் பாதுகாப்பு நிதி என்பனவற்றை பாகிஸ்தான் மூலமே செய்தும் வந்தது.
சோவியத் காலத்தில் இந்தியாவிற்கும், சோவியத்யூனியனுக்கும் இடையோன நெருக்கமான நட்புக்கு இடையூறு விளைவிக்க காஸ்மீரை தமது தளமாக பாவித்தது.
இதனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் என்றாக தொடர்ந்தும் பிரச்சனை தொடர்ந்த வண்ணம் இருந்தது.
ஆனால் காஸ்மீர், காஸ்மீர் மக்களின் மண் என்பதே உண்மை.
இதன் உச்சம் தொட்ட போது இந்தியாவின் முன்மொழிவாக காஸ்மீரின் பிரச்சனையை இந்தியா பாகிஸ்தான் என்ற இரு நாடுகளும் மட்டுமே பேசித் தீர்பது என்றான ‘சிம்லா’ ஒப்பந்தத்தை பாகிஸ்தானும் ஏற்று உருவாக்கப்பட்டது.
ஆனாலும் அமெரிக்கா இவ்விடயத்தில் தாம் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று எப்பவெல்லாம் அங்கு பிரச்சைனைகள் உருவாகுகின்றதோ அப்போது எல்லாம் எப்படியாவது இதற்குள் புகுந்துவிட முயன்று கொண்டிருப்பதான வலாறு.
ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை.
ஆனால் இம்முறை இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகள் தற்போதைய பதட்ட நிலமையிற்கு ‘போர் நிறுத்தம்’ என்பதை அறிவிக்க் முன்பு அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் தமது க்ஸ்(X) தளத்தில் இதனை முதலில் வெளிப்படுத்தி குழப்பங்களை செய்ய முயலுகின்றது.
இதற்கு தற்போது இந்தியாவின் ஆளும் வர்க்கம் சரியான பதிலை, நிலைப்பாட்டை வெளிப்படுத்தாதது இங்கு பெரிய விமர்சனமாகி இருக்கின்றது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து அறிவிக்க வேண்டி விடையத்தை எப்படி அமெரிக்கா தனது முடிவு போல் அறிவிக்க முடியும் என்பதாக.
இடையிடைபே இதனையும் தாண்டி முப்பாய் என்று வேறு பல இடங்களிலும் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக விரிவடைந்தும் இருந்தன.
இதனைச் செய்பவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்து தாக்குதலை நடாத்திவிட்டு பாகிஸ்தானில் உள்ள முகாங்களுக்கு திரும்புதல் என்பது உலகறிந்த உண்மை இதனை பாகிஸ்தான் மறுதலித்து வந்தாலும் இது உண்மை.
இது போர் நிறுத்தம் என்று அறிவித்த அமெரிக்காவிற்கும் தெரியும்.
கிழக்கு மேற்காக வங்காள மொழி, உருது மொழி என்றாக இருந்த இரு பகுதிகளை இணைந்திருந்த பாகிஸ்தான், இந்தியாவின் ஆதரவுடன் பங்காளாதேஸ் என்றாக அதிகம் வங்காள மொழி பேசுபவர்களை பிரித்தது.
கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஸ் ஆக, மேற்குப் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்றானது.
இந்த மாற்றத்தின் பின்பு பாகிஸதானுக்கும் இந்தியாவிற்கு இடையேயான முரண்பாடு பகை முரண்பாடாக உச்சம் பெற்று இன்று வரை தொடர்கின்றது.
சோவியத்தின் உடைவின் பின்னர் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் மேற்குலகம் இந்த பாகிஸ்தான் தலமையக தீவிரவாத்தை எதிர்க்க வேண்டி சூழல் வந்தது.
ஆதனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் பாகிஸ்தானையும் மெது மெதுவாக கை நழுவத் தொங்கியது.
சோவியத்தின் உடைவும் இந்தியா ரஸ்யாவுடனும், அமெரிக்காவுடனும் என்றாக இரு தோணியில் கால் வைத்து சீனாவிடம் இருந்தும் பாகிஸ்தானிடம் இருந்தும் தன்னை பாதுகாக்க முயலுகின்றது.
இவற்றின் வெளிப்பாடுகளின் வளர்ச்சியாக காஸ்மீருக்கு இருந்து வந்த விசேட அதிகாரம் இல்லாமல் செய்யப்பட்டது.
அதனை மூன்று துண்டுகளாக இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநில அஸ்தஸ்து என்ற அதிகாரத்திற்கு வேட்டு வைத்தது தற்போதைய பாஜக அரசு.
கூடவே இப்பிரதேசங்களை மத்திய அரசின் தனது நேரடிக் கண்காணிபிற்கு கீழ் கொண்டும் வந்தது.
இதனைப் பெரும்பான்மையான காஸ்மீர் மக்கள் ஏற்கவில்லை விரும்பவில்லை.
இதன் பின்னர் அங்கு எல்லாம் நிலமை சரியாகிவிட்டது என்ற இந்திய மத்திய பாஜக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அண்மைய சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் இருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பஹல்கம் இற்கு இந்த தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் உட்புகுந்துள்ளனர்.
தாக்குதல் செய்து 20 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை கொன்றுள்ளனர். இதில் நான்கு பேர் சம்மந்தப்பட்டிருப்பதாக இந்திய அரசு கூறியும் இருக்கின்றது.
இந்த 200 கிலோ மீற்றரையும் கடக்கும் வரை இதன் பின்பு கொலைகளை செய்து விட்டு தப்பிய பின்னரும் இன்றுவரை அவர்கள் நேரடியாக கைது செய்யப்படவில்லை. இது இந்தியாவின் பாதுகாப்பின் பலமான ஓட்டைகளை காட்டி நிற்கின்றது.
தற்போதைய அரசு இவற்றை திசைமாற்றி தாக்குதலாக செயற்படுகின்றது இங்கு கவனத்தைப் பெறுகின்றது.
அது பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகளால் ஏற்பட்டது என்பதாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டின் 10 நாள் வரைலயிலான மௌனத்தின் பின்பு…..
பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை இந்தியாவின் ஏவுகணைகள் தாக்கி அழிக்கவும் தொடங்கியது.
இதில் பாகிஸ்தானின் இராணுவ நிலைகள் மீத நேரடித் தாக்குதலை இந்தியா செய்யவில்லை…..?
பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல்களை, இடை மறிப்பு என்பதாக செய்தது.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளாக பாகிஸ்தான் எல்லைக் கிராமங்களாக உள்ள இந்தியாவின் பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல்களைச் செய்தது.
இதன் தொடர்ச்சியாக மாறி மாறி குற்றச்சாட்டுகளும் நாம் தடுத்து விட்டோம், சுட்டு விழித்தி விட்டோம்… என்றான முழு அளவிலான ‘யுத்தம்’ உருவாகலாம் என்றான வளர்ச்சி நிலையில்….
அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பின்…? யுத்த நிறுத்தம் ஏற்பட்டு இருக்கின்றது.
யுத்தம் என்று வந்தால் வளர்ச்சி என்று பார்க்கும் இந்தியாவிற்கும், வறுமை என்று பார்க்கும் போது பாகிஸ்தானுக்கும் அழிவுகள் ஏற்பட்டு நல்ல நிலமைகள் ஏற்பட வழி வகுக்காது.
இதனால் இரு தரப்பும் யுத்தங்களை விரும்பாவிட்டாலும் உள்ளுர் அரசியலை மையப்படுத்தி ‘புஜம்’ காட்டும் வேலைகளில் இறங்கினாலும் அமெரிக்காவின் செல்வாக்கு, சொல்வாக்கு பாகிஸ்தானையும், இந்தியாவையும் போர்நிறுத்தத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதனை இந்தியாவின் எதிர் கட்சிகள் மட்டும் அல்ல மக்களும் விரும்பவில்லை.
அது எப்படி அமெரிக்கா இதில் எமக்கு நாட்டாண்மையாக நடந்து கொள்ளலாம் என்பதாக….
இந்தியாவின் உணர்வலைகள் இந்திய அரசைத் தாண்டி உள்ளது.
‘போரினால் இரு நாட்டு அப்பாவி மக்களுமே அதிகம் பாதிகக்கப்படுவர்.
இதற்கு நாம் பாலஸ்தீனத்தின் பிரசித்த பெற்ற கவிதையை உதாரணம் காட்டலாம்
அது….
‘தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வார்கள்
இறந்து போன மகனின் வருகைக்காக தாய் காத்திருப்பாள்
காதல் கணவனை எதிர்பார்த்து காத்திருப்பாள் அந்தப் பெண்
அந்தக் குழந்தைகள் சாகச அப்பாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்
போருக்கான விலையை யார் தருகின்றார்கள் என்பதற்கான சாட்சி நான்’
போர் பற்றி பார்வையிற்கு
நம்ம பாரதிதாசனையும்….
‘புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்…..’
என்றாக
தமிழ் சினிமாப் பாடல்களையும்….
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
என்றாக
காட்டலாம்
பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வரவேற்போம்.
அவற்றுடன் போராட்டத்துடன், யுத்தத்துடன் வாழ்ந்து இன்று ஆட்சியில் உள்ள எமது ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் செய்திகளையும் இணைப்போம்.
‘….ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தோட்டாக்களுக்கு பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானித்திருப்பது தங்கள் அறிவு ஞானத்தையும் இராஜதந்திரத் திறமையையும். வெளிப்படுத்தியுள்ளது….’