ஈரான் மீதான ஆக்கிரமிப்பு கூறும் செய்தி

115 வரையிலான பள்ளிக் குழந்தைகள் கூடவே மேலும் 40 பேர்வரை பாடசாலை ஆசிரியர்கள் என்றாக கொலை செய்யப்பட்டதாக ஆரம்பமாகியுள்ளது.

ஒரு புறம் ஆட்சி மாற்றம் என்றான சிஸ்ரம் சேஞ்ச்(System Change) என்றாகவும் மறுபுறம் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை இல்லாமல் செய்தல் என்றான இரு முனைத் தாக்குதலை தனக்கு சாதமான உலக ஊடங்களான சிஎன்என் பிபிசி போன்றவற்றின் மூலம் கடந்த சில மாதங்களாக பிரச்சாரங்களை ஆரம்பித்து இதற்கான நியாங்கள் தம்மிடம் உள்ளதாக ஆரம்பித்து நடாத்தப்பட்ட உச்ச தலைவரின் கொலை இது.

இதற்கு தனக்கு சாதகமான ஈரானின் முன்னால் மன்னரின் வாசிசுகள் அவர் சார்ந்த மேற்குல வாழ் உள்ளுரில் வாழும் தொடர்பாளர்கள் மூலம் செயற்கையான் பொருளாதார தளம்பல்களை ஈரானில் கடந்த சில மாதங்கள் அதிகமாகவும் கடந்த பல வருடங்களாக பொருளாதாரத தடை என்றாகவும் மேற்குலகம் மேற்கொண்டு இருந்து
இந்த கொலையை அந்த நாடும் உலகமும் வரலாற்றில் எப்போதும் மறக்காது ஏற்காது.

இது போலத்தான் சதாமின் கொலையும் கடாபியின் கொலையும் அமைந்தன. பிடல் போன்றவர்கள் மீதான கொலை முயற்சிகளும் இருந்தன. இவை வரலாற்றில் இடம்பெற்ற வடுக்களாக அமைந்துள்ளன.
இவை காலம் கடந்துதான் உலகத்தின் வெளிச்சத்திற்கு அதிகம் வந்தன. இதற்கான தண்டனைகளை யாரும் இதுவரை பெறவும் இல்லை பெறப் போவதும் இல்லை.

இவை எல்லாவற்றின் உச்சமாக பொலிவியாவின் நடைபெற்ற சேகுராவின் கொலை இன்று உலகெங்கும் உள்ள மக்களின் ஆதர்ச புருஸராக அவரை அடையாளப்படுத்தவும் உதவியது.

இவற்றிற்குள் ஒரு ஏகாதிபத்திய எதிர்பபு என்ற குரல் தொடரந்து கொண்டு இருப்பதே இந்த கொலைகளினால் ஏகாதிபத்தியம் சாதித்தது என்னமோ உண்மை.

இந்த கொலைகளையும் யுத்தங்களையும் அமெரிக்க நட்பு நாடுகளும் முன்பொருகாலத்தில் பிரித்தானிய ஒரு குடை நாடுகளும் ஆதரித்துதான் இருந்தன அது 2 ம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு.

இதன் உச்சமாக ஹிட்டலர் நடாத்திய கொலைகள் உலக மக்களால் இன்று வரை வெறுக்கப்படுவதாக அமைந்தது போல்.

நேத்தனியாகோ, ட்றம் தலைமையிலான் கொலைகளும் உலக மக்களால் வரலாற்றில் நிச்சயம் வெறுக்கப்படும்… நிறுத்தப்படும்…?

இதுதான் இன்று புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்தும் திறவு கோலாக இந்த புதிய யுத்தம் கொலை ஏற்படுத்தியுள்ளதாக உணர வைத்துள்ளது. அதுவும் நோன்பு காலத்தில்.

யுத்தமற்ற சமாதானம் என்று இஸ்ரேல் எப்போதும் தன்னை காட்டியதும் இல்லை செயற்பட்டதும் இல்லை.

அமெரிக்கா சமாதானத்தின் நாயகன் நான் யுத்தத்தை நேரடியாக விரும்பாதவன் என்றாக சொன்னாலும் 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் நடைபெற்ற பல யுத்தங்கள் ஆக்கிரமிப்புகள் அரச கவிழ்பிற்கு அவர்கள்தான் தம் தரப்பல் கணக்கை அதிகம் வைத்திருக்கின்றார்கள்.

இதற்கு நான்தான் உலக பொலிஸ்காரன் அமெரிக்கதான் முதன்மையானது என்ற சிந்தனயும் அது சார்ந்த செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றன.

இந்நிலையில் தற்போதை இந்திய அரசின் உயர் தலைவர் மோடியின் இஸ்ரேல் பயணம் அங்கு அவர் பேசிய பேச்சுகள் அது ‘…பயங்கரவாத்தை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரேனின் பங்கு….’ என்றாக மோடியின் பாராட்டிய பேச்சுகளும் அண்மைய காசா கொலைகளையாவது கண் மூடித் தெரியாது என்ற அவரின் குஜராத் கொலைகளின் வெறியின் உச்சம்.

இதற்கு அட்சாரமாகத்தான் அண்மையில் ட்றம் இந்தியா மீதான வரியை 10 சதவிகிதத்தால் குறைக்கின்றேன் என்ற ஒரு தலைபட்ட அறிவிப்பு ஆகும்.

அமெரிகக் ஜனாதிபதி கூறுவதைப் போல் இந்த யுத்தத்தில் அமெரிக்க தரப்பிற்கும் இழப்புகள் ஏற்படும் என்றான முற் கூட்டிய அறிவிப்பு நிச்சயம் மத்தியதரை பகுதி அமெரிக்க இராணுவ முகாங்களில் இருந்து வரும் பிணக் குவியல்கள் அமெரிக்க சாமான்ய மக்கள் ஏற்க மாட்டார்கள்.
இதில் சிந்தப்படும் இரத்தம் தக்காளி சட்னி அல்ல ஈரம் காயாத மனித இரத்தம் என்றே அவர்களால் உணரப்படும்.

அது சோமாலியாவில் ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்பு வியட்நாமில் ஏற்பட்டது போல் அமெரிக்க சமான்ய மக்களின் எதிர்பலைகளை…? ஏற்படுத்தி இந்த யுத்தத்தை முடிவிற்கு தோல்வி என்று கூறாமல் கொண்டு வரலாம்.

அன்றேல் இது ஒரு மூன்றாம் உலக யுத்தமாக பரிணாமம் அடைந்து மக்கள் அழிவுகளை ஏற்படுத்தாது என்பதை உறுதியாக கூற முடியாமல் நகரும்.

எமக்கு வேண்டும் யுத்தம் அற்ற சமாதான சக வாழ்வு.

இதில் ஒவ்வொரு நாட்டின் சுயாதிபத்தியம் தன்னாட்சி என்பதை அவர்களே உறுதி செய்யும் நிலை மாறாக இதனைத் தீர்மானப்பவர்கள் உலக பொலிஸ்காரனோ அவர்களின் அடிவருடிகளான இஸ்ரேல் நேட்டோ நாடுகளோ அல்ல.